பக்கம்:நினைவுச்சரம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#46 நினைவுச்

என்று அவளிடம் கேட்கவேண்டும் என மனம் துடித்தாலும் அதை கேட்காமல் அவளேயே பார்த்தபடி நின்ருர்.

இவ யாரு? இவளே முன்னலேயே பார்த்தமாதிரி இருக் குதே என்று குழம்பிக்கொண்டிருந்தார் பால்வண்ணம்பிள்ளை.

ஐயா, என்ன இனம் தெரியுதா ? ஐயாவுக்கு என்னே அடையாளம் கண்டுக்கிட முடியுதா ? என்று அவள் சிரித்துக் கொண்டே கேட்டாள்.

அவளுக்கு ஐம்பது-ஐம்பத்திரண்டு வயதுதான் இருக்கும் என்ருலும், அவ்வயசுக்கு மீறிய முதுமைச் சின்னங்களே காலம் அவள் முகத்திலும் மேனியிலும் உழுது விதைத்திருந்தது. வறுமையும் வாழ்க்கைச் சோதனைகளும் அதற்குக் காரண மாக இருக்கலாம். உடல் மெலிந்து, கன்னங்கள் ஒட்டிப் போய், தலைமயிர் நரைத்து, இளமையின் அழகையும் இயல் பாய் அவளுக்கிருந்த அம்சங்களையும் சிதைத்துப் பாழ்படுத்தி யிருந்தன. அதல்ை நாற்பது வருஷங்களுக்கு முன்னே அவள் எப்படி இருந்திருப்பாள் என்று நினைத்துப்பார்த்து, இன்னுர்தான் என்று இப்போது புரிந்துகொள்ள முடியவில்லே பெரியபிள்ளேயால்.

தனது இயலாமையை மறைக்க விரும்பவில்லே அவர். தெரியலேயே யாரு ? என்று, தன்னை நன்ருக அறிந்து வைத்திருக்கும் அவளிடமே இப்படிக் கேட்க வேண்டியிருக் கிறதே என்ற வருத்தத்தோடும் வெட்கத்தோடும், கேட்டார்.

நாற்பது வருசமாச்சே! நானும் ரொம்ப மாறிப்போயிட் டேன். எப்படி கண்டுகொள்ளமுடியும்?’ என்று தனக்கும், தயங்குகின்ற அவருக்கும் சமாதானம் கூறிக்கொள்பவள் போல் முணமுணத்து, நான்தான் செம்பகம். உங்க வீட் டிலே வேலே செய்துகிட்டிருந்த பொன்னம்மா மக என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

செம்பகம்’ என்ற சொல்லே அவர் உள்ளில் ஏகப்பட்ட வெளிச்சத்தைத் தட்டி ஒளியூட்டிய ஸ்விச்சின் க்ளிக் ஒசை போல் அமைந்துவிட்டது. செம்பகமா!' என்று அதிச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/146&oldid=589390" இலிருந்து மீள்விக்கப்பட்டது