பக்கம்:நினைவுச்சரம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#56 நினைவுச்

அவுக. ஐயாவை கும்பிடு. அவுகளையும் கும்பிடு என்று மகளுக்கு அறிவுறுத்தினுள்.

மகளும் பணிவுடன் வணங்கிவிட்டு உள்ளே போனுள்.

இதெல்லாம் எதுக்கு! இப்பதான் வடக்கு பஜார் ஒட்டல்லே டிபனும் காப்பியும் சாப்பிட்டோம் என்ருர் ம.கு. பெனு.

ஆமா, சாப்பிட்டுட்டுதான் இப்படித் திரும்பினுேம் ? எனறு பால்வண்ணம் தெரிவித்தார்.

முறுக்குத்தட்டை அவர்கள் முன் வைத்துவிட்டு, அத குலே என்ன? நான் அன்போடு தாறதையும் சாப்பிட்டு வையுங்க. ரெண்டு முறுக்குக்கா வயிற்றிலே இடம் இல்லாமல் போகுது!’ என்று கூறி லேசாகச் சிரித்தாள் செண்பகம். மகள் கொண்டுவந்த காப்பி டம்ளர்களே வாங்கி அவர்கள் பக்கத்தில் வைத்தாள். -

அவர்கள் மறுப்பதற்கில்லே. முறுக்கு ருசியாக இருந்தது. காப்பிதான் கருப்புக்கட்டிப் பானகமாக இருந்தது. அன்புடன் தரப்பட்டதை குறை கூறிக் கொண்டிருக்க முடியுமா?

சிறிதுநேரம் பேசிவிட்டு இரண்டுபேரும் அப்ப நாங்க வாருேம் என்று கிளம்பினர்கள்.

  • ஐயா எங்களே மறந்துடாதீங்க ஞாபகம் இருக்கட்டும்? என்று கூறி வணங்கினுள் தாய்.

மறக்கமுடியுமா?’ என்ருர் மன. பெணு போயிட்டு வாருேம்...வாருேம் மயிலு!’ என்று விடை பெற்ருர்,

மயிலும் வணக்கம் கூறித் தலையை ஆட்டினுள். அந்தக் காலத்துச் செம்பகமே கண்ணுக்குள்ளே வந்து நிக்கிறமாதிரி இருக்கு என்று பெரியபிள்ளை எண்ணிக்கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/150&oldid=589395" இலிருந்து மீள்விக்கப்பட்டது