பக்கம்:நினைவுச்சரம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

ar gäst 153

இருந்திருக்கணும். ஆனு, அந்த அழகெல்லாம் எங்கே போச்சு? வாலிப வனப்பும் வலிவும் சிறப்பும் நாற்பது வருச காலத்திலே எப்படியோ மக்கிப்போயி, பரிதாபத்துக்குரிய ஒரு உருவமா நிக்கிறதை பார்க்கையிலே, மனுசப் பிறவியிலே ஏன் இப்படி எல்லாம் நடக்கு என்ற வேதனேதான் எனக்கு ஏற்படுது என்று கூறி, நீண்ட பெருமூச்சு உயிர்த்தார்.

எதிர்ப்பட்ட வளின் சின்னவயசு உருவத்தை நினைத்துப் பார்த்து ஏங்குவதுபோல் அவர் பேசியதைக் கேட்கவும், அண்ணுச்சியும் பெரிய ஆளுதான் போலிருக்கு!’ என்று பால்வண்ணம் எண்ணிக்கொண்டார். அவர் வேதாந்த ரீதி யிலே பேச்சை முடிக்கவும் இவருக்கு சப்பென்ருகிவிட்டது.

வயல்வெளி முடிந்ததும் ஒரு வாய்க்கால். அதன் பாலத் தைக்கடந்து, படிக்கட்டைத் தாண்டி, முடுக்கு போன்ற தெருவில் அடிவைத்தால், படப்பகுறிச்சி ஊர். வாய்க்காலில் தண்ணிர் ஒடிஞல் குளிக்கும் ஆட்கள் நிறைய தென்படுவார் கள். இப்போது ஒரு ஈ-காக்கைக.ட தென்படவில்லே!

அப்புறம் சற்று தொலேவுக்கொரு ஊராக அநேக கிரா மங்கள். எல்லாம் வறண்டு துரங்கி வழிந்துகொண்டுதான் இருந்தன.

இந்த ஊர்கள் எல்லாம் அன்னேக்குப் பார்த்தமாதிரியே தான் இருக்கு. பிரமாத மாறுதல் எதையும் காணுேம். பளிச்னு தெரிகிற மாற்றம் அல்லது வளர்ச்சியின்னு ஒன்றை சொல்லணுமின்ன, எங்கே பார்த்தாலும் புதர்புதரா மண்டிப் பேயா வளர்ந்துகிடக்குதே நீர்க்கருவைச் செடி-வேலிக் கருவையின்னும் சொல்லுவாங்க-அதைத்தான் சொல்லனும், எந்த ஊருக்குப் போனலும் இதுதான் வனமா வளர்ந்து கிடக்கு ! குறுகிய காலத்திலே ரொம்ப வேகமாப் பரவிப் படர்ந்திட்டுது ஐயா இந்தச் செடி. மேலும் மேலும் பிசாசு வேகத்திலே வளர்ந்துகிட்டேயிருக்கு !’ என்ருர் மனு, பென.

இதுேைல ஒரு லாபம்-ஊராரின் விறகுப் பிரச்னை சுலப

மாத் தீருது. வெட்ட வெட்ட துளுத்துக்கிட்டே இருக்குதே

பூ 108-கி.10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/153&oldid=589399" இலிருந்து மீள்விக்கப்பட்டது