பக்கம்:நினைவுச்சரம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#54 நினைவுச்

இந்தச் செடி வெட்ட வெட்டத்தான் அதன் வளர்ச்சிக்கு வேகம் ஏற்படுது என்ருர் மற்றவர்.

அந்நாளேயிலே சப்பாத்திக்கள்ளி இப்படித்தான் வேக மாப் படர்ந்து பரவி, ரொம்பத் தொல்லேயா மாறிக்கிட் டிருந்துது. அதை ஒழிக்க ஒரு வெள்ளைப்பூச்சி வந்துது. ஒருசில வருசத்திலே சப்பாத்திக்கள்ளி இருந்த இடம் தெரியாமப் போயிட்டுதே ! அப்புறம் அது தலைதுாக்கி ஒத்தை செத்தெ வளர முயற்சித்தாலும், கூடவே அந்த வெள்ளேப்பூச்சியும் தோணி அதை தலே எடுக்க விடாதபடி அதை அழிச்சுக்கிட்டே இருக்கு. அதுமாதிரி, பெரும் தொல்லே யாகவும் இடைஞ்சலாகவும் மாறிவிட்ட இந்த வேலிக்கருவை யையும் அழிச்சு ஒழிக்கிறதுக்கு ஒரு பூச்சி வந்து சேராதுன்னு இருக்கு இப்ப !’

அப்படி ஏதாவது வந்து அழிச்சாத்தான் உண்டு அண் ச்ைசி. இப்ப நம்ம ஆத்தங்கரை நெடுக இந்தச் செடி கண்ட மானிக்கி அடர்த்தியா வளர்ந்து வண்டித்தடமே இல்லாதபடி பண்ணிப்போட்டுது. போகப்போக கரைமேலே ஆட்கள் நடக்கிறது.கூடக் கஷ்டமாகி விடும்போல் தோணுது. ஒரே அடியா, புதர்புதரா இந்தச் செடி வளர ஆரம்பிச்சிட்டுது : என்ருர் பாவன்னு.

இருவரும் தாமிரவருணி ஆற்றை வந்தடைந்திருந் தார்கள்.

ஆற்றை கடந்து வடகரை சேர்ந்து, பைகளே புல்தரை யில் வைத்துவிட்டு, அப்பாடா!’ என்று உட்கார்ந்தார்கள்.

கொஞ்சநேரம் ரெஸ்ட். அப்புறமாக் குளிப்பு என்ருர், பெரியபிள்ளே. - அப்படியே செய்வோம்’ என்று, சட்டையை கழற்றி விட்டு, புல்மீது துண்டை விரித்து, நீட்டி நிமிர்ந்தார். பால்வண்ணர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/154&oldid=589400" இலிருந்து மீள்விக்கப்பட்டது