பக்கம்:நினைவுச்சரம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 155

1 4

ஆத்திலே குளிக்கிற சுகமே தனிதான் என்று பால் வண்ணம்பிள்ளே மகிழ்ந்துபோனர். இரண்டு முங்கு போட்டு விட்டு நடு ஆற்றில் உட்கார்ந்திருந்தார் அவர்.

தலையைமட்டும் வெளியே வைத்தபடி தண்ணிருக்குள் கிடந்த மயிலேறும் பெருமாள்பிள்ளை, சொல்லனுமா அதை!’ என்ருர். அதிலும் அதிகாலே நேரத்திலே வந்து, அமைதி நிறைந்த சூழ்நிலையில், குளுகுளு தண்ணிரில் முங்கிக் குளிக் கிற சுகத்துக்கும், அது தருகிற சந்தோஷத்துக்கும் ஈடு இனே கிடையவே கிடையாது. ரெண்டு வேளேயும் ஆற்றுக்கு வந்து குளிப்பதனலே மனசுக்கு ஏற்படுகிற இதமும், உடலுக்கு உண் டாகிற நலமும் அனுபவிக்கிறவங்களுக்குத்தான் தெரியும்’ என்று சிலாகித்தார்.

நானும் தினம் காலேயிலே ஆத்துக்கு வரணும்னு நினைக் கிறதுதான். முடியலியே அண்ணுச்சி :

எதுக்கும் கொடுத்துவச்சிருக்கணுமய்யா கொடுத்து வைச்சிருக்கணும்!’ என்று சொல்லி, நீருக்குள் அமிழ்ந்து அப்படியே கொஞ்சநேரம் ஆழ்ந்திருந்தார் பெரியபிள்ளே . பிறகு தலையை வெளியே தூக்கினர்.

பால்வண்ணரும் குளித்தவாறே, என்ன இருந்தாலும் தாமிரவர்ணித் தண்ணிக்கு இருக்கிற மதிப்பு தனிதான்என்ருர்.

ஒவ்வொரு ஆறை ஒட்டி வாழ்கிறவங்களும் இப்படித் தான் பெருமைபட்டுக் கொள்கிருங்க. காவேரிக்கரை ஓரமா வசிக்கிறவங்க, காவேரித் தண்ணியின் பெருமையையும் அதில் நீராடுகிறதல்ை உண்டாகிற சிறப்பையும் சொல்லிச் சொல்லி கர்வப்படுகிருங்க. பார்க்கப்போன மனுசங்களுக்கு தன் வீடு, தன் இனம், தன் சாதி, தன் ஊரு, தனது ஜில்லா, அப்புறம் தன்னுடைய நாடு என்கிற நினைப்பினுலே ஏற்படுகிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/155&oldid=589401" இலிருந்து மீள்விக்கப்பட்டது