பக்கம்:நினைவுச்சரம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ត្រៃ 16

{

மறந்திட்டாங்க. எல்லார் கண்களும் பெரிய வெள்ளத்திலே எதிர் நீச்சல் போட்டுப் போராடி முன்னேறும் பக்கிள்பிள்ளே பேரிலேதான் நிலைத்து நின்றன. அவர் மண்டபத்து மேலே போய் சேர்ந்ததும் எல்லாரும் கைதட்டி தங்கள் பாராட்டை தெரிவித்தாங்க, ஹாய், என்ன அற்புதமான நேரம் அது !

அங்கிருந்து தொட்டிலே கயிற்றில் கட்டி இழுத்து ஒவ் வொரு ஆளாக ஏற்றி அனுப்பிவைத்தார் பக்கிள் பிள்ளே. பாலத்து மேலே தயாராக நின்றவங்க தொட்டிலே இழுத்து ஆட்களே கரையேற்றினங்க. எல்லாரும் வந்து சேர்ந்தபிறகு, பக்கிள்பிள்ளே கயிற்றை அவிழ்த்து விட்டுவிட்டு நீச்சலடிச்சே பாலத்துக்கு வந்து சேர்ந்தார். அன்றைக்கு அவரை, அவர் வீரத்தை, வியந்து பாராட்டாதவங்களே கிடையாது.

இந்த அனுபவத்தை விரிவாகச் சொன்ன மயிலேறும் பெருமாள்பிள்ளே, எப்படியாப்பட்ட ஆள்கள் எல்லாம் இருந் திருக்காங்க அவங்களும் கடைசியிலே போன இடம் தெரி யாமல் செத்து மறைஞ்சுபோளுங்க ? என்று முடித்தார்.

அப்படிப்பட்ட சூரன்களும் நம்ம சிவபுரத்திலே பிறந்து வளர்ந்தாங்க என்று நெனேக்கிறபோது எவ்வளவு பெருமை யாக இருக்கு சந்தோஷமாகவும் இருக்கு’ என்று பால் வண் .ணம்பிள்ளே மகிழ்வுற்ருர். -

15

என்ன அண்ணுச்சி, திருநெல்வேலிக்குப் போயிருந் தேளா ? என்று கேட்டபடி பிறவியாபிள்ளே வந்து சேர்ந் தார், அன்று ராத்திரி. -

திருநெவ்ேலிக்குத்தானே, போயிட்டு மத்தியானம் வந்திருவிகளேன்னு நெனச்சு மத்தியானத்துக்கு மேலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/161&oldid=589409" இலிருந்து மீள்விக்கப்பட்டது