பக்கம்:நினைவுச்சரம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 நினைவுக்க

வந்து பார்த்தேன். மூணு மணிக்கும், நாலு மணிக்கும். நீங்க வரலே என்றும் தெரிவித்தார்.

விசேஷம் ஏத்ாவது உண்டுமா ? என்று பெரியவர் கேட்டார்.

ஒண்னுமில்லே, சும்மாதான்.” 'நான் திருநெவேலி, வீராவரம், பாளேயங்கோட்டைன்னு: சுத்திப்போட்டு வந்தேன். பால்வண்ணமும் வந்திருந்தாரு. வரும்போது அப்படியே நடந்துவந்து, ஆற்றிலே குளிச்சுப் போட்டு வீடுவந்து சேரையிலே ஏழுமனி ஆயிட்டுது என்று. மன. பெனு கூறிஞர்.

ராத்திரிக்குச் சாப்பாடு? தோசை சுட்டு கொண்டுவரட் டுமா அண்ணுச்சி ?? என்று பிறவி விசாரித்தார்.

தோசை எதுக்கு! பழையச்சோறு நிறையவே இருந். துது. பிழிஞ்சுவச்சு, சுண்டக்கறி, நாரத்தங்கா ஊறுகா எல் லாம் சேர்த்து சாப்பிட்டாச்சு. நீரு வேணும்னலும் சாப்பிட லாம் என்று பெரியபிள்ளை திருப்தியோடு சொன்னர்.

செத்த முந்தி பால்வண்ணம்பிள்ளையை பார்த்தேன். நீங்க போய் வந்தது.பத்தி எல்லாம் சொன்னுரு. சம்பகம் மகளோடு பாளையங்கோட்டை வடக்குப்பேட்டையிலே குடி. யிருக்கானாமே??

‘ஊம்’ என்று இழுத்தார் மன. பென. எனக்கு ஆளே அடையாளமே தெரியலே முதல்லே. அவ புருசன் இருக் கானே என்னவோ தெரியலே. சிவப்புச்சீலேதான் கட்டி. யிருந்தா என்ருர். ஆன இந்தக் காலத்திலே தாலி அறுத் தவங்ககூட சிவப்புச்சீலே கட்டுறதுதான் சகஜமாயிட்டுதே? என்று முணுமுணுத்தார்.

அவர் சிவப்புச்சீலே என்று குறிப்பிட்டது சிவப்பு நிறச் சேலே என்ற கருத்தில் அல்ல. வெள்ளேச்சீலே அல்லாத இதர வர்ணச்சில்ேகள் என்ற பொருளில்தான் இந்தப்பதம் இவ் வட் டாரத்தினரால் உபயோகிக்கப்படுவது வழக்கம். கணவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/162&oldid=589411" இலிருந்து மீள்விக்கப்பட்டது