பக்கம்:நினைவுச்சரம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 63 - நினைவு #

அப்படி இருக்கையில், பல தனி நபர்களேக் கொண்ட குடும்பங்களில், பலபல குடும்பங்கள் வசிக்கிற ஊர்களில் மாறுதல்களே நிகழாது இருந்து விடுவது சாத்தியம் அல்ல.

மாறுதல் வளர்ச்சியின் அறிகுறி என்று சொல்லப். படுவது உண்டு. மாறுதல்கள் அனைத்துமே வளர்ச்சியின் சின்னங்களகத்தான் இருக்கவேண்டும் என்கிற கட்டாயம். எதுவும் இல்ஃப்.

மாறுதல்கள் வளர்ச்சியை சுட்டுவனவாகவும் இருக்கலாம். சரிவை, தேய்தலே, காட்டுவனவாகவும் இருந்துவிடலாம். எனவே, மாறுதல்கள் தேக்கமின்மை "யின் அறிகுறி என்று கொள்ளப்படவேண்டும்.

மயிலேறும் பெருமாள் பிள்ளே சொந்த ஊரில் இல்லாமல் போன நாற்பது வருஷகாலத்தில், இந்த நாட்டிலே எத்தனை எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன.

சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ய ’த்தை கொண் டிருந்த பிரிட்டிஷ் சிங்கம் என்று கீர்த்திக்கொடி நாட்டி இந்த நாட்டை ஆட்சி புரிந்துகொண்டிருந்த வெள்ளேயரை எதிர்த்து நடந்த போராட்டத்தில்

அரை நிர்வாணப் பக்கிரி என்றும் பழம் ராட்டுப் பயில்வான் என்றும் அதிகாரவர்க்கத்தினரால் இழிவாகப் பேசப்பட்ட, சாதாரண மனிதத் தோற்றம் பெற்றிருந்த, ஆலுைம் மகாத்மா வின் மாண்புகளைக் கொண்டிருந்த ஒரு தலவனின் சக்திக்குக் கட்டுப்பட்டு, மக்கள் கிளர்ந்தெழுந்த போது- -

இந்த நாட்டின் பலபல பகுதிகளிலும், எங்கெங்கோ உள்ள ஊர்களிலும், எண்ணற்ற குடும்பங்களிலும், கணக்கி லடங்காத் தனி நபர்களின் வாழ்க்கையிலும் அதிசயிக்கத் தகுந்த மாறுதல்கள் எவ்வளவோ புகுந்தன. -

உலகத்தை பாதித்த இரண்டாவது உலக மகாயுத்தத் தினுல் இந்த நாடும், ஊர்களும், குடும்பங்களும், தனி நபர் களும் பலரக மாறுதல்களே அனுபவிக்க வேண்டியிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/168&oldid=589419" இலிருந்து மீள்விக்கப்பட்டது