பக்கம்:நினைவுச்சரம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 1KB

சுதந்திரமும், சுயநாட்டு மக்களிடையே வளர்ந்து செல் வாக்குப் பெற்றிருந்த ஒரு கட்சியை சேர்ந்தவர்களின் அரசாங்கமும், அவர்களே எதிர்த்து வளர முயன்ற பல கட்சி களின் கொள்கைகளும் செயல்முறைகளும் எத்தனை எத் தனேயோ மாறுதல்களே எங்கும் விதைத்தன.

பின்னர், ஆளும் கட்சி மாறி, வேருெகு கட்சி அரசு அமைத்துத் தனது நோக்குகள் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்புரியத் தொடங்கியதும், மக்கள் மத்தியில் தலையெடுத்த மாறுதல்கள் பலப்பல. -

இவ்வாறெல்லாம் கால வேகம் அலே அலேயாகக்கொண்டு சேர்த்த பொதுப்படையான மாறுதல்களும், தனித்துவமான மாற்றங்களும், மயிலேறும் பெருமாள் பிள்ளையின் சொந்த வாழ்விலும், அவரது சொந்த ஊரான சிவபுரத்திலும் சிலசில அதிர்வுகளை உண்டாக்கின என்று சொல்லமுடியுமே தவிர, அழுத்தமான முத்திரைகளே பதித்துவிட்டன என்று சொல்வ தற்கில்லே.

மயிலேறும் பிள்ளே போன்ற மனிதர்கள் எத்தனே எத் தனையோ பேர் சிவபுரம் போன்ற ஊர்களும் எத்தனையோ தான் ! -

மகாத்மா காந்தியின் சக்தியும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கும் ஓங்கிவந்த காலத்தில், இளைஞன் மயிலேறும் பெருமாள் கதர் கட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டான். வீட்டில் காந்திஜி படத்தை மாட்டிவைத்தான். -

சிவபுரத்தில் அநேக வீடுகளில் காந்தி, ராஜேந்திர பிரசாத், படேல், ஜவாஹர்லால் நேரு படங்கள் காட்சி அளிக்கலாயின. அநேகர் கதராடை உடுத்தினர்.

பால்வண்ணம் காந்திக் குல்லாய் அணிந்துகொண்டு, காந்திஜி புத்தகங்களே வாங்கிப் படித்தார்.

ஊரில் காங்கிரஸ் கொடியை கம்பத்தில் உயரமாய் பற்க்க விடுவதில் உற்சாகம் காட்டினர்கள்.

11-اكت-س-108 سفيا

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/169&oldid=589420" இலிருந்து மீள்விக்கப்பட்டது