பக்கம்:நினைவுச்சரம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரக் 17

ரேடியோ ஆரேழு வீடுகளில் இருந்தன. ரேடியோ நியூஸ்” கேட்பவர்கள் ஒன்றிரண்டு பேர்தான் உண்டு. ஆகவே, உலக விவகாரம், உள்நாட்டு ஆக்கப்போர்கள் பற்றிய ஞானம் சிவபுரவாசிகளுக்கு அதிகம் இல்லே என்றே குறிப்பிட வேண்டும். - -

அவற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற அவாவும் அவர்களுக்கு இல்லே. -

சிலர் பக்திப் பாடல்களே ரேடியோவில் கேட்பதில் ஆர்வம் காட்டினர். அநேகமாக எல்லோருமே திரை கானம்-கன் அந்தந்த நேரங்களில் கேட்பதிலும், சிலோன் ரேடியோவின் சினிமா சங்கீத ஒலிபரப்புகளே எல்லா நேரங் களிலும் கேட்பதிலுமே ஈடுபாடு உடையவர்களாக இருத் தரர்கள்.

ரேடியோ வருவதற்கு முன்பு? கிராமபோன் மூலம் இசைத்தட்டு இன்னிசையை ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

இப்போது இரவு பத்தரை மணிக்கும் பதிைேரு மணிக் கும், ரசனே என்பதைவிட, பழக்கத்திலுைம் பெருமைக் காகவும் ரேடியோவை அலறவிட்டு மகிழ்வதுபோல, அந் நாட்களில் ராத்திரி, ரொம்ப நேரம்வரை "பூனக்கிராப் பெட்டி யை போனேகிராப் ஓலமிடவிட்டு, கூட்டமாக இருந்து கிட்டப்பாவையும், சுந்தரம்பாளேயும், முசிரியையும், செம்மங்குடியையும், திருச்செந்தூர் சண்முகவடிவையும், சுப்புத்தாயியையும் கேட்டு சந்தோஷப்படுவது அவர்கள் வழக்கமாக இருந்தது.

ஏதோ சாரமற்ற வாழ்வில் ஒரு தனிரசம் என்ற முறையில் தான் இதுவெல்லாமே தவிர சங்கீதத்தில் ஈடுபாடோ ரசனையோ அவர்களுக்கு என்றும் இருந்ததில்லை; இன்றும் இல்லே. -

ஒன்றிரண்டு பிரமுகர்கள் தங்கள் வீட்டிலும் பத்திரிகை வாங்குவது உண்டு என்று காட்டுவதற்காகப் பெருமையாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/171&oldid=589423" இலிருந்து மீள்விக்கப்பட்டது