பக்கம்:நினைவுச்சரம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 1 75

இப்போது வயசுப் பிள்ளேயாண்டான்கள் மாதிரி விசித்திர மான வர்ணங்களில் எல்லாம், விதம் விதமான கட்டங் களேயும் கோலங்களையும் கொண்ட துணிகளில்கூட, சட்டை தைத்துப் போட்டுக்கொண்டு, வல்லாட்டும் மேல்துண்டும் இல்லாமலே எங்கு வேண்டுமானுலும் போய் வருகிருள்கள்.

இதுபோன்ற எத்தனையோ மாற்றங்களே மயிலேறும் பெருமாள் பிள்ளே நாகரிக நகரங்களில் மட்டுமல்லாது, சாதாரண கிராமமான சிவபுரத்திலும் கவனிக்கத்தான் செய் தார். துருவித் திரியும் அவரது பார்வையும், சதா சலனித்து அனேத்தையும் பதிவு பண்ணிக்கொள்ளும் அவர் மனமும் இதை எல்லாம் கவனிக்கத் தவறவில்லே, *

இவ்வாறு தனிமனிதப் பழக்கவழக்கங்கள் என்று சொல் லப்படவேண்டியன தவிர்ந்த பொதுவான விஷயங்களிலும்குடும்பங்கள், இனம், ஊர் நிலைமைகளிலும்-பலபல மாறு தல்கள் ஏற்பட்டிருப்பதையும், இன்னும் ஏற்பட்டு வருவதை யும் பெரியபிள்ளே கவனிக்கத்தான் செய்தார்,

பத்தரை மாத்து சைவப்பிள்ள்ேகள்-பிள்ளைமாரிலே உயர்ந்த இனம்-என்று சொல்லிக்கொண்டவர்கள் சிவபுரத் துக்காரர்கள். முட்டையைகூடத் தொடமாட்டார்கள்.ரொட்டி, கேக் தினுசுகளில் முட்ட்ை கலக்கப்படுவது உண்டு என்று பலரும் பேசுவதனால் அவற்தை வாங்கவேமாட்டார்கள். ஒவல்டின் னில் முட்டைச்சத்து சேருது என்பதல்ை, டாக்டர் தேக ஆரோக்கியத்துக்காக ஒவல்’ சாப்பிடனும் என்று சிபாரிசு செய்தாலும்கூட, அதை தொடக்கூட மறுத்தவர்கள் அவர்கள். முஸ்லிம் கடைப்பக்கம் எட்டியும் பாராதவர்கள்.

காலப்போக்கிலே என்ன ஆச்சு? வெறும் டியும் பிஸ் கட்டும் சாப்பிடப் போருேம்’ என்று முஸ்லிம் ஒட்டல்களுக் குப்போக ஆரம்பித்தார்கள். பிறகு, பிரியாணி சாப்பிடப் போனர்கள். இப்போது எந்த ஒட்டலில் எந்தக் கறிவகை ருசிகரமாக இருக்கும் என்று ஊரிலேயே சர்ச்சை செய்து பொழுது போக்கி, சாயங்காலம் ஆனதும் அவற்றை ருசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/175&oldid=589428" இலிருந்து மீள்விக்கப்பட்டது