பக்கம்:நினைவுச்சரம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#76 நினைவுச்

பார்த்து மகிழ்வதற்காக ஜங்ஷனுக்கும் டவுனுக்கும் விரைகிற பிள்ளைமார் குலக்கொழுந்துகள் நிறைந்திருக்கிருர்கள் சிவ புரத்திலே. -

மயிலேறு ஊரைவிட்டுப் போகும்போது பத்தரை மாத்துகள் குடும்பங்கள் சிவபுரத்தில் எண்பது இருந்தன. மயிலேதும் பெருமாள் பிள்ளே ஆக அவர் திரும்பிவந்துள்ள இப்போது பிள்ளைமார் வீடுகள் பதினெட்டே பதினெட்டு’ தான் இருக்கின்றன.

பெரியவர்கள், வயதானவர்கள், ஊருக்கே அத்தாரிட்டி’ யாக இருந்து போடு போடுன்னு போட்டவர்கள் பலபேரும் தெற்கே ஆத்தங்கரை போய் சேர்ந்துவிட்டார்கள். அநேக குடும்பங்கள் கடன் பெருகி, இருந்த வீடுவாசல் நிலங்கள்ே விற்றுவிட்டு பிழைப்புத் தேடி வெளி ஊர்களுக்குப் போய் விட்டன. பட்டிக்காட்டில் இருக்கப்பிடிக்காத பலர் இங் குள்ள வீடுகளே வாடகைக்கு விட்டுவிட்டு, அல்லது அடைத் துப் பூட்டிவிட்டு, திருநெல்வேலிக்கும் பாளையங்கோட்டைக் கும், துனத்துக்குடிக்கும் மதுரைக்கும் குடியேறி, சில வருஷங் களில் அங்கங்கே வீடு கட்டிக்கொண்டு தங்கிவிட்டார்கள்.

விற்பனையான வீடுகளில் சிலவற்றை மறவர் அல்லது கோளுர் அல்லது வேறு இனத்தவர் எவராவது வாங்கிக் கொண்டு குடியேறி, குழந்தை குட்டிகளோடு வசித்ததோடு, ஆடுகளையும் கோழிகளேயும் வளர்த்து நெடுகிலும் நடமாடச் செய்துகொண்டிருந்தார்கள். நயம் தேங்காயெண்ணேயில் கறிவகைகள் தாளிப்பது, பண்ட பலகாரங்கள் செய்வது என்று, சதா தேங்காயெண்ணே மணம் எழுந்து பரவிநிற்கும் பெருமையை உடைத்தாயிருந்த சைவப்பிள்ளைமார் வட்டா ரத்தில் இப்போது ஆட்டுக்கறி, கோழிக்கறி வகையான பக்குவம் செய்யப்படுவதால் எழுகிற மணமும், கறுவாடு வறுப்பதால் உண்டாகிற நாற்றமும் கலந்து நிலவுவதும் சகஜ மாகிவிட்டது. . :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/176&oldid=589429" இலிருந்து மீள்விக்கப்பட்டது