பக்கம்:நினைவுச்சரம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் $89

சிரமமும், இந்தவழக்கங்களே எல்லாம் குறைக்கனும் அண் ச்ைசி என்று பால்வண்ணம் ஓங்கி அடித்தார்.

வறண்ட சாரமற்ற வாழ்க்கையிலே இது மாதிரி விசேஷங்கள் சந்தோஷமும் ஜிலுஜிலுப்பும் உண்டாக்கும்னு தான் அந்தக் காலத்திலே இதுகளே சிறப்பா, விஸ்தாரமா செய்தாங்க. கல்யாணத்திலே எத்தனே சடங்குகள், அயிட் டங்கள்! எல்லாம் வரவரக் குறைந்து போச்சே. பட்.ணப் பிரவேசம்கிறது இல்லாமல் போனது கல்யாணத்தின் சிறப்பையும் அழகையும் நயத்தையும் எவ்வளவோ குறைச் சிட்டுதுன்னு தான் நான் சொல்வேன். குதிரைச் சாரட்டிலே ஊர்வலம், மோட்டாரிலே பவனி, ஆயான் தகக்திலே பட்டணப்பிரவேசம்-இதெல்லாம் எவ்வளவு குதூகலமா, வர்ணமயமா, குளுகுளுப்ப இருந்தது தகத்து என்ற அந்தத் தேர் மாதிரியான அமைப்பிலே, பொண்னும் மாப்பிள்ளேயும் ஜம்னு வீற்றிருக்க, பொம்மைகள் கையிலே மெழுகுவத்தி விளக்குகள் ஏந்தி நிற்க, ரெண்டு பொம்மைகள் வெண்சாமரம் வீச, கியாஸ் லேட் வெளிச்சத்திலே, அந்தத் தகத்தில் நெடுகவும் பதிக்கப்பட்டிருந்த ரசம் பூசின சின்னச் சின்னக் கண்ணுடிகள்-தகதகன்னு பலநூறு சதுரங்களா ஒளிவெட்ட... அதனாலேதான் அந்த வண்டிக்கு தகத்துன்னு: பேரு வந்திருக்கும்...ஆகா, எவ்வளவு ஜோரான காட்சி அது! எல்லாம் இப்போ இல்லாமலே போயிட்டுதே. வரவர ஜனங்கள் தங்களுடைய வாழ்க்கையின் வர்ண மயமான அம்சங்களே இழந்துக்கிட்டே வாருங்கன்னுதான் எண்ண வேண்டியிருக்கு !’ என்ருர் மனு, பெளு.

பொருளாதார அடிப்படைதான் காரணம். வளங்களும் வருமானமும் குறையக் குறைய, வறட்சி ஏற்பட ஏற்பட, இந்த வகையான மாறுதல்கள் தானகவே வந்து வளருது ” என்று பால்வண்ணம்பிள்ளே அபிப்பிராயப் பட்டார்.

இப்படி வறட்சியும் வெறுமையும் இருப்பதேைலதான், அன்ருட வாழ்க்கையில் விறுவிறுப்பும் சூடு பிடிக்கட்டுமே என்று, மனிதர்கள் வம்புகளையும் அக்கப்போர்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/189&oldid=589447" இலிருந்து மீள்விக்கப்பட்டது