பக்கம்:நினைவுச்சரம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 நினைவுச்

உண்டாக்கி, பரப்பி விடுவதிலே அதிக ஆர்வம் காட்டு கிருர்கள்’ என்று மனு, பென. எண்ணினர்.

அது அவர் விஷயத்திலேயே பலித்துவிடும் என்று பெரிய பிள்ளே எண்ணியதேயில்லே.

ஆல்ை அது நடக்கத்தான் செய்தது. சாரமற்றதுபோல் தோன்றிய சிவபுரம் வாழ்க்கையில் விறுவிறுப்பும் சூடும் ? ஏறுவதற்குத் தூண்டுகிற ஒரு தீயசக்தி மாதிரி வந்து வாய்த் தாள் கல்யாண வீட்டுக்கு வருகை புரிந்த செம்பரா நல்லூர் அழகம்மை ஆச்சி.

செம்பராநல்லூரில்(செண்பகராமநல்லூரில்) வாக்கைப் பட்டிருந்த வாழ்க்கைப்பட்டிருந்த) அழகம்மை அம்மாள் பிறந்த ஊர் சிவபுரம் தான்.

இதில் அவளுக்கு ஒரு தனிப்பெருமை. ; எங்க பெரிய வீட்டுச் சித்தப்பா அடிக்கடி சொல்லுவோ--சிவபுரம் பத்தரை மாத்து சைவப் பிள்ளேமாரின் நாத்தங்கால்னு. நாத்தங் காலிலே முளேச்சு வளருகிற நாத்துகளே எடுத்து எங்கெங்கோ உள்ள வயலுகளிலே நட்டுப் பயிராக்குகிற மாதிரி, சிவபுரத்தி லேயிருந்து ஏகப்பட்ட பெண்ணுக எல்லாத் திசை ஊர்களி லும் வாழ்க்கைப்பட்டு நம்ம சாதி பரவிப் பெருகும்படி பண்ணி வருதுங்க. எப்பவுமே சிவபுரத்திலே பெண்ணுக அதிகம் தான். இப்போ கூட இந்த ஊரிலே கல்யாணத்துக்குக் காத்திருக்கிற புெண்ணுகளின் எண்ணிக்கை இருபதுக்குக் குறையாது’ என்று அவள் அடிக்கடி பெருமையோடு கூறிக் கொள்வாள்.

அவள் எந்த வருஷத்தில் இதை சொன்னலும், அந்தச் சமயம் வீட்டோடு இருந்த பருவ மகளிர் எத்தனே என்று எண்ணிப் பார்த்தால் இருபதுக்கு அதிகமாகவே சேர்ந்து விடும். பொழுது போகாத பொம்பிளேகளுக்கும், கண்டதை எல்லாம் பேசிப் பொழுது போக்குகிற ஆம்பிளேகளுக்கும் அவ்வப்போது இப்படி லென்ஸ்ஸ் எடுப்பது -யார் யார் வீட்டிலே எத்தனை பொண்ணு சம்ைஞ்சிருக்கு என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/190&oldid=589448" இலிருந்து மீள்விக்கப்பட்டது