பக்கம்:நினைவுச்சரம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரம் 193

வாழ்வு; விரதம் அனுஷ்டானம் என்று சொல்லி பாலும் பழங் களும், அவலும் சத்தான ஆகாரங்களும் தின்று தின்று உரமேறிய உடல்; ஒய்ந்திருக்காது ஒடியாடி உழைத்தும், ஊர் சுற்றி அலைந்தும் வைரம் ஏறிப்போன சட்டை. ஆகவே, அவள் தெம்பாகத்தான் நடமாடிக் கொண்டிருந்தாள். கண் பார்வையும் கூர்மையாக இருந்தது; காதுகளும் அருமை யாகக் கேட்டன. மூளேயும் குட்ரயுக்திகள் பண்ணி, சுறுசுறுப்பாக இயங்கியது. இவை எல்லாம் இப்படி நல்ல நிலேமையில் இருப்பது ஊர்காரர்களைப் பற்றிய வம்புதும்புகளே சேகரித்து, அதிகப்படியான யூகங்கள்-கற்பனேகளேயும் சேர்த்து, தன் ஒத்தவர்களிடம் சுவையாகப் பேசி, எல் லோரும் இன்புற்றிருப்பதற்காகத்தான் என்பது அவள் நம்பிக்கை.

இம்முறை கல்யாணத்துக்கு என்று சிவபுரத்துக்கு விஜயம் செய்த செம்பராநல்லூர் ஆச்சிக்கு, வேப்பமரத்து வீட்டு மயிலேறும்பெருமாள் இரை ஆர்ை.

கல்யாணமெல்லாம் முடிந்தபிறகு ஒருநாள் ராத்திரி, ஒரு கிளேப்பறவைகளாய் ஒரு வீட்டில் கூடியிருந்தபோது, ஆச்சி அதிசயமாய் கேட்டாள், ஆமா, மயிலுப்பிள்ளை ஊரோடு வந்துட்டாரமே ? என்ன அதிசயமாயிருக்கு! நாப்பது வருசகாலம் இந்தப்பக்கமே திரும்பிப் பார்க்காத விரதம் அனுஷ்டித்த விசுவாமித்திரன இருந்தாரே! இப்ப எந்தக் காந்தம் அவரை இங்கே இழுத்திட்டு வந்துதாம்? என்று. அவள் நீட்டி நீட்டி இழுத்துப் பேசும் தோரணையே

தனி.

ஆச்சி கொஞ்சம் படித்திருந்தாள். புராணம் இதிகாசம் தேவார திருவாசகம் எல்லாம் அத்துபடி.

ஆமா ஆச்சி, ஓங்கிட்டே கேட்டா விசயம் தெரியுமே?” என்று பீடிகையோடு பேச்சை துவக்கினுள் நாற்பது வயசுப் பேத்தி ஒருத்தி. ஏன் ஆச்சி அவரு இந்த ஊரைவிட்டுப் போயி வெளியூரிலே அப்படி இருந்தாரு? இங்கே யாருக்குமே தெரியலே. எத்தனையோ பேரிட்டே கேட்டுப்பார்த்தாச்சு!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/193&oldid=589452" இலிருந்து மீள்விக்கப்பட்டது