பக்கம்:நினைவுச்சரம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 நினைவுச்

அழகம்மை ஆச்சிக்கு நாற்பது வருஷ சமாச்சாரம் மட்டுமா தெரியும் ? நான்கு தலைமுறைகளின் ஜாதகங்களும் சரித்திரமும், வம்புகளும் வதந்திகளும் அவளுடைய நினைவுக் கருவூலத்தில் அடைந்து கிடந்தனவே! அவற்றை எந்த நேரத்தில் வேண்டுமானுலும் குறி தவருமல் எடுத்துப் பிரித்துக் கடைபரப்பக் கூடிய ஆற்றலும் அவளுக்கு இருந்தது. -

வெறும் நாக்கையே சுழட்டிச் சப்புக்கொட்டி மகிழும் சுபாவம் பெற்றிருந்தவள் சுவையான புட்டுக் கருப்பட்டி’ கிடைத்தால் விட்டுவைப்பாளா?

அதையேங் கேட்கேபோ ! என்று தொடங்கிள்ை. 'அந்தக் கரிக்கொல்லனுக்கு முப்பது வயசாகியும் கல்யாணம் ஆகாமலே இருந்துது. யாரும் பொண்ணு கொடுக்க முன் வரலே. எவ வருவாங்வேன்? அவனுேட ஆத்தாகாரிதான் பத்தாயிரத்தை கொண்டா, இருபதனுயிரத்தை கொண் டான்னு ஏலம் கூறிக்கிட்டிருந்தாளே அவ மகன் எப்பே (F.A.jயும் பீயே (B.A.iயும் படிச்சு, தாசில் வேலையும் கலெக்டர் உத்தியோகமும் பார்த்தமுல்லா சவத்துமுண்டை சாகமாட் டாமெ அலேஞ்சா. பொறகு செத்துத் தொலேஞ்சான்னு வையி. பாழறுவானுக்கு பொண்னு கெடைக்கலே. ஆன வயசு சும்மா இருக்கவிடுமா ? கொழுப்பும் கறியும் வெறுமனே படுத்துக்கிடக்க விட்டிருமா ? வீட்டிலே பொன்னம்மா பொன்னம்மான்னு ஒருத்தி எல்லா வேலேயும் செய்துக்கிட் டிருந்தா...?

அவளே பெண்டாட்டியாக்கிக்கிட்டாராக்கும்?’ என்று ‘பூஜை வேளேயில் கரடி விட்டது அவசரப்பிச்சு.

நான்தான் சொல்லிக்கிட்டு வாரேனே. அதுக்குள்ளாற. உனக்கு என்னட்டி அவசரம்?’ என்று கண்டித்துவிட்டு ஆச்சி தொடர்ந்தாள். பொன்னம்மா பாவம் அரைக்கிழவியானவ. ரொம்பவும் கஷ்டப்பட்டு ஒட்டி உலர்ந்து போனவ. அவளே பத்தி பழி சொன்ன பாவமாக்கும். அவளுக்கு செம்பகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/194&oldid=589453" இலிருந்து மீள்விக்கப்பட்டது