பக்கம்:நினைவுச்சரம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 98 நினைவுச்

  • 9

இந்த ஸிசன்லே மாம்பழம் மலிஞ்சுபோச்சு. ஜங்ஷன், பாளையங்கோட்டை நெடுக மலேமலேயாக் குவிஞ்சுகிடக்கு சவம் !’

தச்சநல்லூரிலும் அம்பாரம் அம்பாரமாக் குவிச்சுவச் சிருக்கான். ஆன விலையை விட்டுக்குடுக்க மாட்டேன் கிருனுக.” -

  • பழம் பெரிசா இருக்கே தவிர, ருசியா இல்லியே. நல்லப் பழுத்த பழமாவும் இல்லே.”

இந்த வாழைப்பூச்சாதியே அப்படித்தான். ஒருபக்கம் புளிப்பாவும் ஒரு பக்கம் இனிச்சும் தானிருக்கும். விக்கிறவங்க நல்லாப் பழுக்கிறவரை விட்டுவைப்பதுமில்லே. உரைக்காயி லேயே பறிச்சிட்டு வந்து விக்கிறதுக்குக் குவிச்சிடுருங்க. நல்லாப் பழுத்த பிறகுதான் விக்கிறதுன்னு ஆரம்பிச்சா, அவங்களுக்கு நஷ்டம். விக்கிறதுக்கு அநேக நாளாகுது. அதுக்குள்ளே பழங்கள் ஒண்னு ஒண்ணு அழுகத் தொடங். கிடும். அதேைலதான் பழுத்தும் பழாமலும் இருக்கையி லேயே விற்பனைக்கு வந்திருது.” -

ஒருநாள் சாயங்காலம் மயிலுப்பிள்ளே ஆற்றுக்குப்போய் கொண்டிருந்தபோது, முன்னே சென்ற மூன்று பேர் மாம் பழங்களேப் பற்றிப் பேசியவாறே நடந்தார்கள்.

அப்போதுதான் அவருக்கு கொற நோக்காட்டு மாம் பழம் ஞாபகத்துக்கு வந்தது. பெரிதாகவும், அறுத்தால் செம்மை கலந்த மஞ்சள் நிறமாகவும், சதைப்பற்று நிறைந் ததும், மிகுந்த இன்சுவையும் மணமும் கொண்டும் இருந்தது அந்த சாதிப்பழம். தோல் பச்சையாகத்தான் இருக்கும். சிறிது மஞ்சள் கலந்தும் இருக்கும். பழுத்தும் பழுக்காதது மாதிரி. ஒவ்வொரு பழமும் ஒரு செம்பு- பால் சொம்பு? என்று சொல்லப்பட்ட உருண்டையான பெரிய செம்பு-அள வுக்கு இருக்கும். ஆனல் மேலே பூராவும் குஷ்டரோகியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/198&oldid=589457" இலிருந்து மீள்விக்கப்பட்டது