பக்கம்:நினைவுச்சரம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய அளவு பழத்தை நறுக்கித் தின்று அதன் மிக இனிய சுவையை ருசித்தும் இருக்கிருர். அதுபோன்ற குறைநோக் காட்டுப் பழங்களை அப்புறம் அவர் வேறு எங்கும் கண்டது. மில்லே.

இப்போது அதை நினைத்துக்கொண்டபோது மன. பென. எண்ணினர் :

- இயற்கையின் செயல்களில் எத்தனையோ மர்மங்கள் கலந்திருக்கு. எல்லாவற்றையும் பூரணமாகப் புரிந்துகொள்ள முடியும் என்று சொல்ல இயலவில்லே. நல்ல முறையில் காய்த்துக்கொண்டிருந்த மரத்தில் இப்படி ஒரு விசித்திரம் தோன்றுவானேன்? அந்த ஜாதி மாஞ்செடி முளேக்குமா என்று யாரும் சோதனை நடத்தலே போலிருக்கு. அந்த மரத்தின் நல்லப் பழுத்த பழத்தின் கொட்டைகளே அந்த ஊரிலும் வேறு ஊர்களிலும் நட்டு, மாமரம் முளேக்குதா, அதில் காய்க்கும் காய்கள் எப்படி இருக்கு என்று யாரும். சோதிச்சுப் பார்க்கலே போலிருக்கு. ஒரு விசித்திரமான ஜாதி மரம் அப்படியே அழிஞ்சு போயிட்டுதே! வீணுக. அழியும்படி விட்டுட்டாங்களே! ஊம்ங். நம்மவங்ககிட்டே இதுதான் பெரியகுறை. புதுமைகளே பாதுகாக்கனும்கிற முயற்சி, உந்துதல், ஊக்கம் கிடையாது. ஆராயும் அவா, சோதஜனகளே நடத்தி வெற்றிகரமான விளைவுகளே காண வேண்டும் என்கிற துடிப்பு கிடையாது. இருக்கிறதுகளே அப்படி அப்படியே ஏற்று, இருக்கின்றவரை அனுபவி. அவை மறைஞ்சுபோச்சா? சேரி, விட்டுத்தள்ளு ; அவற்றின் விதி அவ்வளவுதான்னு நினைக்கிற மனுேபாவம்தான் வேரூன்றி இருக்கு. ஆ,ை ஒவ்வொண்ணுக்கும் பொருத். தமா ஒரு கதைகட்டி விடுருங்கய்யா. அதிலே இவங்க கெட்டி!

இந்த நினைப்பு கிளேயோடி, ஒரு காலத்தில் இருந்து, காலவெள்ளத்தில் அடிபட்டு, இன்று இல்லாது போய்விட்ட எத்தனையோ விஷயங்களைத் தொட்டது. அதன் தீண்டுதலில் விபத்தாசி என்ற தின்பண்டமும் அகப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/200&oldid=589459" இலிருந்து மீள்விக்கப்பட்டது