பக்கம்:நினைவுச்சரம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 201

‘ஏ பார்த்தியா, இந்த பத்தாசி என்கிற பண்டம் இல்லா லாமலே போயிட்டுதே! என அதிசயித்தது அவர் மனம்.

வெறும் சீனிப்பாகுதான் அது. சீனியை முறுகக் காய்ச்சி, அந்தப் பாகை ஒரு கரண்டியாலே கோதி, தாம்பாளத்திலே அல்லது மரப்பலகையிலே, வட்டம் வட்டமா ஊத்துவாங்க, அது காய்ந்ததும், சில்லுச் சில்லாக, எடுக்கிறதுக்காக வாட் டமா வந்துவிடும். வெள்ளே வெளேர்னு, ஊடே ஊடே காற்றுக் குமிழ்களான வெற்றிடங்களோடு, தின்ன மொறு: மொறு என்று, தனிச்சுவையோடு ரொம்ப இனிப்பாக இருக்கும். சின்னப் பிள்ளைகள் விரும்பித் தின்பார்கள். கல்யாணம் முடிந்து, மறுவீட்டுப் பணியார தினுசுகள் வந்து சேர்ந்ததும், மாப்பிள்ளே வீட்டார் ஊர் வழக்கம்’ என்று, உறவின் முறையாருக்கு பண்டங்கள் வழங்குவார்கள். அவற் றில் ஒன்றிரண்டு பத்தாசியும் இருக்கும். முன்பு அந்நாட்களில் சைவப்பிள்ளைகள் நடத்திய மிட்டாய் கடைகளில் இந்த இனிப்புப் பண்டமும் விற்கப்பட்டு வந்தது. பிறகு இல்லாமலே போய்விட்டது.

  • மனுசங்களுக்கு தோற்றமும் மறைவும் இருப்பது போலவே, இயற்கையில் தோன்றுகிறவற்றுக்கும் மறைவு என்று ஒன்று நிகழ்வதுபோலவே, மனுசர்களால் உண்டாக் கப்படுகின்றவற்றுக்கும் மறைவு என்பது தானகவே ஏற்பட்டு விடுது என்று பெரியபிள்ளே எண்ணினர்.

தின்கிற விஷயங்களே பற்றியே எண்ணிக்கொண்டிருந்த தால், மனநாக்கில் நீர் சொட்டலாயிற்று. எதையாவது தின்ருல் நன்ருக இருக்குமே என்ற எண்ணம் பசி எனும் நினேப்பை அவருக்கு உண்டாக்கியது. வீடுநோக்கி நடக்கிற போதே, தின்பண்டம் வேணும் என்கிற ஆசை வளர்ந்தது.

- இந்தச் சமயம் எதுவும் தின்னலாம். பஜ்ஜி, வடை, பூரி கிழங்கு...அல்வா, கேசரி, மைசூர்பாகு, திரட்டுப்பால் ஜோராக இருக்கும். பிஸ்கட் தினுசுகள், கேக்குகள்...முறுக்கு, தேங்குழல், மிக்ஸ்சர்.மொறமொறன்னு ஏதாவது. ஆற்றி

18 سيؤنس 108 سريين

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/201&oldid=589460" இலிருந்து மீள்விக்கப்பட்டது