பக்கம்:நினைவுச்சரம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of run 205

  • நாலு மணி ஆகுது. எந்திரிச்சு காப்பி போடலாம். இன்னிக்கு காப்பி குடிச்சிட்டே ஆத்துக்குப் போகலாம். ரெண்டு நாளா மனசே சரியாயில்லே. ஏன் என்றே புரியலே...: -

மன. பெனு. எழுந்து, படுக்கையைசுருட்டி வைத்தார். பம்பில் தண்ணிர் அடித்து, வாய் கொப்புளித்து முகம் கழுவினர். - -

- நாலரை மணிக்கெல்லாம் ஃபர்ஸ்ட் பஸ் வாறசத்தம் கேட்கும். முதல் கார் சத்தத்தைக் கேட்டு சிலபேர் எந்திருச் சிருவாங்க. அஞ்சு மணிக்கு, பக்கத்து வீட்டிலே பம்பு அடிச்சு தண்ணி புடிக்கிற சத்தம், வாளியை இழுத்து நகர்த் துகிற ஒசை...சிமின்ட் கம்பெனிக்கு, மில்லுக்கு, கார்பைட் பாக்டரிக்கு முதல் ஷிப்டுக்கு வேலைக்குப் போகிறவங்களுக் காக அவங்க அவங்க வீட்டிலே உணவு தயாரிப்பாங்க. அங்கும் இங்குமா அம்மி தட்டுற ஓசை, காலேயின் அமைதி யூடே ரொம்பவும் கனத்து வந்து காதைத் தாக்கும். அஞ்சே கால் மணிக்கு ரண்டாவது கார் ஆரனே அலறவிட்டுக்கிட்டு வந்து சேரும்...சத்தங்களுக்குக் குறைவேயில்லே !

நான்கு மணிக்கு முன்பிருந்தே ஒரு குருவி-கறுப்பாய், குயிலேவிடச் சிறியதாய், சிறிது நீண்டவால் உடையதாய் இருக்கும்-இனிய குரலில் விஞ்சிட்டு...வீஞ்சிட்டு’ என்று நீட்டி நீட்டிக் கூவும். விடியும்வரை கூவிக்கொண்டே யிருக்கும். அது விடிஞ்சிட்டு-விடிஞ்சிட்டு’ என்று ஒலி பரப் புவது போலவே தொனிக்கும். -

இப்போதும் அந்தக் கருங்குருவி விஞ்சிட்டு-வீஞ்சிட்டு!’ என்று ராகமெடுத்துக் கூவியது. விடிவதற்கு இன்னும் நேரம் கிடந்தபோதே அவசரக்குடுக்கையான அந்தக் குருவி ‘விடிஞ்சிட்டுது’ என்று அறிவித்து யாரையோ எழுப்ப முயன்று கொண்டிருந்தது வேடிக்கையாகத்தான் பட்டது பெரியபிள்ளேக்கு.

- இந்தக் குருவி பங்குனி சித்திரையிலேதான் ரொம்பச் சத்தம் போடுது. மாசி மாசத்துக்குப் பிறகுதான் இந்தச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/205&oldid=589464" இலிருந்து மீள்விக்கப்பட்டது