பக்கம்:நினைவுச்சரம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 நினைவுச்

பேளே? கொஞ்சம் தின்னு பார்க்கேளா? என்று அன்பாக உபசரித்தாள்.

'இப்ப வேண்டாம். நான் ஆத்துக்குப் புறப்பட்டுக்கிட் டிருந்தேன். தினம் அஞ்சேகாலுக்கே போயிருவேன். இன் னிக்கு அஞ்சரைக்குப் போகலாமேன்னு தாயமாடினேன். அதுவும் நல்லதாப் போச்சு. ஏது திடீர்னு? மயிலு சும்மா இருக்காள்ளா ?? என்று கேட்டார் அவர்.

- ஏன் இவ இப்படி திடீர்னு இந்த நேரத்திலே வந்து சேர்ந்திருக்கா? என்ன முக்கிய விஷயம் இருக்கும்?

அவர் மனம் குறுகுறுத்துக் கொண்டிருந்தது.

பகல் நேரத்திலே வாறதுக்கு எனக்கு என்னவோமாதிரி இருந்துது. ராத்திரியே வந்து, பேசவேண்டியதை பேசிட்டு, அதிகாலேயிலே முதல் காருக்கே திரும்பிவிடலாம்ன்னு கூட நெனேச்சேன். அது வேண்டாம், நல்லாயிருக்காதுன்னு பட்டுது. நாலரைக் காருக்கு வரணும்ன, நான் பாளையங் கோட்டையிலிருந்து மூணு மணிக்கே கிளம்பியாகணும். அதுவும் தோதுப்படாதுன்னிட்டுத்தான் அஞ்சேகாலுக்கு இங்கே வந்து சேருத காரில்ே வத்தேன். வரும்போது யாருக்கும் தெரியவேண்டாமேன்னு நெணேப்பு. போகும் போது தெரிஞ்சாலும் பரவாயில்லேன்னு நெனேச்சேன். இந்த மனசு என்னவெல்லாம் தான் எண்ணிக்குழம்புது : என்று சொல்லிச் சிரித்தாள் செண்பகம்.

நீங்க நிற்கேளே? ஆத்துக்குப் போயிட்டு வாங்க.நீங்க வாறதுக்குள்ளே நான் காப்பி போட்டு வய்க்கேன். -

இன்னிக்கு நான் நாலு மணிக்கே எழுந்திரிச்சிட்டேன். காப்பியும் போட்டாச்சு. அஞ்சு மணிக்கே ஆத்துக்குப் போகாம இருந்துது உன் அதிர்ஷ்டம்தான் !’ என்று கூறி மன. பென. சிரித்தார்.

உங்க வாக்குப்படியே இருக்கட்டும். ஆமா. பாலு?? கடுங்காப்பிதான். பாலு ஏழு மணிக்கு மேலேதான் கிடைக்கும்.?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/208&oldid=589467" இலிருந்து மீள்விக்கப்பட்டது