பக்கம்:நினைவுச்சரம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் - 2.

களோட மகள்கதான் கல்யாணமாகிப் புருசன் வீட்டுக்கும் போனதும் சிவபுரத்தாள்’க ஆவாங்க. அ. ஹ ஹ ...”

ரசித்துச் சிரித்தார் பெரிய பிள்ளை.

ஆமண்ணுச்சி. நீங்க சொல்றது கரெக்டு தான். நீங்க சொன்னப்புறம் தான் இது என் மூளேயிலே படுது’ என்று. பிறவிப் பெருமாள் ஒத்து ஊதினர்.

ഥത്ര. பென. ஆரம்பித்தார் மறுபடியும் :

'ஒவ்வொரு பொம்பிளேக்கும் தன் பிறந்த ஊர் மேலே, தான் பிறந்த வீட்டு பேரிலே, தான் விட்டு வந்த குடும்பத்து மேலே அலாதியான ஒரு பிடிப்பு-ஒரு பந்தம்-ஒரு பற்றுதல் -ஒரு பாசம் சாகிற வரைக்கும் இருந்துக்கிட்டே யிருக்கும். என்னதான் கல்யாணமாகி வந்து சேர்ந்து வாழ்கிற இடத்து. மேலே, குடும்பத்து பேரிலே ஒரு ஒட்டுதல் ஏற்பட்டிருந்தாலும் -அல்லது ஏற்பட்டுவிட்டது போல் காட்டிக்கிட்டாலும்அவளுக மனசு பிறந்த வீட்டுப் பெருமைகளை, பிறந்த குடும் பத்தைச் சேர்ந்த ஆளுகளே, அவங்க புரவோலங்களேயேதான் பெரிசா நினைச்சுக்கிட்டிருக்கும். பொம்பிளேகளின் மனத் தராசிலே பிறந்த இடத்துக்குத்தான் வெயிட் அதிகம். புகுந்த இடத்தைப்பத்தி அவங்களுக்கு அவ்வளவா உயர்வான அபிப் பிராயம் ஏற்படுவது இல்லே. எங்க அம்மாவும் அப்படித்தான். வெள்ளுரும், மச்சு வீட்டுப் பிள்ளே குடும்பப் பெருமையும்தான் அவளுக்கு. அந்த ஊரிலே அவங்க குடும்பத்திலே தான் முதன் முதல்லே மச்சு வீடு கட்டி, கிரகப் பிரவேசம் பண்ணிக் குடிபுகுந்தாங்களாம். அதுக்குப் பிறகு பல மாடி வீடுகள் ஏற்பட்டுவிட்ட போதிலும் அவங்க குடும்பத்துக்கு வாய்த்த மெச்சு வீட்டுப் பிள்ளே வீடுPங்கிற பேரு மாறவேயில்லே. ஒவ்வொரு ஊரிலும் இது மாதிரி விசித்திரங்கள் இருந்துக்கிட்டே தான் இருக்கு. என்ன நான் சொல்றது?’ என்று கேட்டு, சிரிப்பு என்னும் பெயரால் ஒரு கணேப்பை உதிர்த்தார் அவர்.

பிறவியாப் பிள்ளையும் கூடச் சேர்ந்து சிரித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/21&oldid=589263" இலிருந்து மீள்விக்கப்பட்டது