பக்கம்:நினைவுச்சரம்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 - நினைவுச்

ஒரு குற்றமும் செய்யாதபோது, இப்படி அநியாயமாப் பழி சுமத்தினங்களேன்னு வருத்தம். திறைமறைவிலே, இருட் டிலே, எவ்வளவோ அக்கிரமங்களும் அநியாயங்களும் இந்த ஊரிலேயே நடந்துகிட்டு இருக்கு. விசாரிக்கப்போகிற பெரிய மனுசங்களிலேயே சிலபேரு செய்துக்கிட்டு இருக்காங்க. என்னே அடிக்க பிளான்பண்ற பயல்களே பண்ணிக்கிட்டிருக் காங்க. விளேயாட்டா, தற்செயலா நிகழ்ந்துவிட்ட ஒரு அசம்பாவிதத்துக்கு, இத்தனை காது மூக்கு வச்சு ஓகோன்னு கலாட்டா பண்ணுருங்களேன்னு எனக்கு மனவேதனை. அப்போ எனக்கு முப்பது வயசு. ஊருக்கு எதிரா ஒண்னும் பண்ணமுடியாது. எதிர்த்து நிற்கக்கூடிய தெம்பும் திராணியும் பணபலமும் எனக்கு இல்லே. அதேைல இரவோடு இரவா ஒடிப்போய்விடுவதுதான் நல்லதுன்னு முடிவு செஞ்சேன். நாரம்பு மாமாவும் துணை புரிஞ்சா. மதுரைக்குப் போனேன்.

அது நடந்தும் நாற்பது வருஷம் ஆச்சு. காலப் புழுதியிலே எல்லாம் மூடி மறைஞ்சு போச்சு. என்னே விசாரிக் கணும்னு சொன்னவங்க எப்படி எப்படியோ ஆகி, செத்தும் போனங்க. அடிக்கணும்னு திரிஞ்சவங்களும் போய் ஒழிஞ் சாங்க. அவங்க எல்லோரும் உயிரோடு இருந்தால் கூட இந்த விஷயத்தை மறந்திருப்பாங்க. கொஞ்ச நஞ்சம் நினைவு இருந்தாலும், நான் பணக்காரன, வெள்ளிக்கடை முதலாளி என்கிற கவுரவத்தோடு, பெரிய மனுஷ தோரணையோடு, இந்த ஊருக்கு வந்து சேரையிலே அதை பெரிது பண்ண முன் வந்திருக்க மாட்டாங்க. பத்துப்பன்னெண்டு வருஷத்துக்கு முன்னடியே நான் இங்கே வந்திருக்கலாம் தான். ஆனால், பணம் பண்ணுகிறவெறி அப்போ எனக்கு நிறைய இருந்தது. பையன் சொக்கையாவும் சின்னவன இருந்தான். இப்போ கடையை நிர்வகிக்கக் கூடிய திறமையும் சக்தியும் வயசும் அவனுக்கு வந்திட்டுது. எனக்கும் எழுபது வயசு ஆச்சு. வீட்டு நினைப்பு போட்டு அடிச்சுக்கிட்டே இருக்கு. இந்த வீட்டிலே கொஞ்ச நாளாவது வசிக்காமல் செத்துவச்சால், என் நெஞ்சு வேகாது, ஆத்மா அமைதி அடையாதுன்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/214&oldid=589473" இலிருந்து மீள்விக்கப்பட்டது