பக்கம்:நினைவுச்சரம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 219

23

காலப்புழுதி மனிதர் மனசிலே மறதி படியும்படிச் செய்து, அனேத்தையும் மூடிவிடும் என்று எண்ணிய மயிலேறும் பெரு மாள்பிள்ளே, சிவபுரம்வாசிகளின் ஆற்றலைச் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார் என்றே தோன்றியது. செம்பரா நல்லூர் ஆச்சி போன்ற குறைக்காற்று எந்தப் புழுதியையும் கிளப்பி, பறக்கச் செய்து, குழிபறித்து விடக்கூடிய சக்தியும் கொண்டிருக்கும் என்பதையும் அவர் கருத்தில் கொள்ள வில்லே.

செம்பராநல்லூர் அழகம்மை ஆச்சி பற்றவைத்த வத்தி சுர்சுர்ரென்று பற்றிக் கொண்டது. அவர் பேச்சை நேரடி யாகக் கேட்ட அஞ்சாறு பேர்களும் அந்த விஷயத்தை தங்க ஞக்கு வேண்டியவர்களிடம் சொல்ல, அவர்கள் தங்கள் புருஷன்மாரிடமும் சொந்தக்காரர்களிடமும் தெரிவிக்க, மறந்து மக்கிப்போய்விட்டதாக மன. பெனு. முடிவுகட்டி யிருந்த, விஷயம் புது மெருகோடும் புதிய பூச்சுமானங்க ளோடும் மறுமலர்ச்சி பெற்று, ஊர் முழுதும் சுற்றிக்கொண் டிருந்தது. இதற்கு இரண்டு நாட்கள் கூடத் தேவைப்பட

ஆணுல், இப்போது பெரிய மனிதராய், பெரும் பணக் காரராய் வளர்ந்திருந்த மன. பென. வை, அந்த ஊரில், அவருக்குப்பிந்தி வந்த தலைமுறையை சேர்ந்தவர்கள் ஒன்றும் செய்துவிட முடியாது. என்ருலும், அவர் மகாப் பெரியவர் ஒன்றுமில்லை ; குறைபாடும் பலவீனமும் களங்கமும் உடைய மனிதர்தான் என்று சுட்டிக்காட்டிப் பேசவும், இவரு இப்படியா, இஹரிஹி : என்று இளித்துப் பழிக்கவும் அவர் களுக்கு ஆச்சி சொன்ன சங்கதி ரொம்பவும் பயன்பட்டது.

ஆச்சி போய்விட்ட மூன்ரும் நாள், செண்பகம் பெரிய பிள்ளையை பார்க்க வந்தாள், அவரிடம் ஏதோ ரகசியங்கள் பேசிவிட்டுப் போளுள் என்ற விஷயமும் தெரியவந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/219&oldid=589478" இலிருந்து மீள்விக்கப்பட்டது