பக்கம்:நினைவுச்சரம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 நினைவுச்

முதுக்குக்குப் பின்னலே வலிச்சம் காட்டி சிரிச்சுக்கிட்டிருப் பூான். ! ? -

பெருமூச்சு பொங்கி வந்தது.

வெறும் பயலுக வெறும் வீணப்பய புள்ளைக. ஆம்பிளேக பொம்பிளேக எல்லாருமேதான் !’ -

கனன்றது அவர் உள்ளம். எழுந்து கதவைச்சாத்தி தாழ்ப்பாள் போட்டார். லட்டை அணைத்தார். படுக்க விரும்பவில்லை. தூக்கம் வரப்போவதில்லே.

-இன்னேக்கு சிவராத்திரிதான். துரக்கமாவது மண் குறைவது !

அவர் அங்கும் இங்கும் நடந்தார். இருட்டே துணையாக, அதுவே தைரியமூட்டும் சக்தியாக, மடம் போன்ற-கோயில் போன்ற-சத்திரமே போன்ற ஒரு தனித்துவமும் புனிதமும் அழுத்தமுமான மவுனமும் சாந்தி அளிக்கக்கூடிய ஒரு அம்ச மாக விளங்க, அறை அறையாக நடந்தார்.

-அஞ்சாறு நாளாகவே மனசு சரியில்லாமல் குழம்பிக் கிட்டேயிருந்தது. எதுக்கு இப்படி அர்த்தமில்லாத கலக் கமும் குழப்பமுமின்னு அடிக்கடி நினைச்சேனே. இதுக்குத் தான், இதுக்கேதான்.

அவர் என்னென்னவோ எண்ணினர். தன்னைபற்றி, இந்த ஊரையும் ஊர்க்காரர்களையும் பற்றி, தனித்தனியாக சிற்சிலரைப்பற்றி எல்லாம் எண்ணினர். செம்பகத்தை' பற்றியும் நினைத்தார். மதுரையில் உள்ள மனைவி மீனுட்சியைப் பற்றியும், தனக்கு உதவிபுரிந்து தன்னே ஆளாக்கிவிட்ட வெள்ளிக்கடை முதலாளி கணபதியாபிள்ளையைப் பற்றியும் எண்ணிக் கொண்டார்.

-அவாள் தங்கமான மனுஷர். எனக்கு எல்லா உதவி களும் செய்து, நான் வளருவதுக்கு வழியும் காட்டி, என் னையும் ஒரு மனிதனுக்கிவிட்டாங்க. அதுதான் உண்மையான மனுஷத்தன்மை. ஒரு பையன் அறிவு அபற அவனுக்கு கல்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/224&oldid=589483" இலிருந்து மீள்விக்கப்பட்டது