பக்கம்:நினைவுச்சரம்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 நினைவுச்

அவர் நடையோடு சிந்தனையும் வளர்ந்து கொண்டே போயிற்று.

- மற்றவங்க, ஊர்காரங்க, திருப்தி அடையும்படியா "சிலாக் காலமும் ஒருவல்ை வாழ்ந்து விட முடியாது. அப்படி வாழ வேனும்கிற அவசியமும் இல்லை. ஆல்ை ஒவ்வொருவனும் தன் மனசுக்கு உண்மையா நடந்தாகணும். இனக்குத்தானே நியாயமாக, யோக்கியமான முறையில், கல்லவகை நடக்கணும். அது தான் முக்கியம். நான் நல்ல ஆஅக, யோக்கியஞக, ஒழுக்கசீலகை நடந்து கொண்டிருந்த போதிலும், நான் வேலைக்காரியின் மகளோடு தொடர்பு வைத்து அக்கிரமம் செய்து விட்டேன் என்று நாற்பது வருஷங் களுக்கு முன்பிருந்தவங்க பிரசாரம் பண்ணினங்க. இன்றைக்கு இருப்பவங்களும் அந்தக் கதையை நம்பி, பிரசாரம் செய்து சந்தோஷப்படுருங்க. போகட்டும் ! அப்படி எதுவும் நடக்கலே. அது என் மனச்சாட்சிக்குத் தெரியும். செம்பகத்துக்கும் தெரியும். அது போதும். மற்றவங்க எப்படியும் நினைத்து, என்ன வேண்டுமானலும் பேசிக் கொள்ளட்டும். நான் கவலே கொள்ளவோ பயப்படவோ மாட்டேன். இந்த வீட்டை விட்டுப் போகவும் மாட்டேன். எனக்கு சரி என்று படுவதை, நான் செய்து கொண்டு தான் இருப்பேன்... - -

மயிலேறும் பெருமாள் பிள்ளையின் மனம் உறுதிப் பட்டது. அவர் நிதானமாக, நிம்மதியாக, இருளின் ஆழத் தில், அந்த வீட்டின் ஆத்மா போல, அறை அறையாக நடந்து கொண்டே யிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/226&oldid=589485" இலிருந்து மீள்விக்கப்பட்டது