பக்கம்:நினைவுச்சரம்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 229.

இலே போடம்மா, மயிலு என்று கூறிய செண்பகம், நேரமாச்சுல்லா. சாப்பிட்டுக்கிட்டே பேசலாம் என்று பெரியவரிடம் அறிவித்தாள்.

இலைகள் போட்டு, நீர் தெளித்து, கறிவகைகள் பரிமாறப்பட்டன. ஒரு வகைக்கறி வைத்திருந்தாள் செண் பகம். அவளே சோறு எடுத்து வந்து படைத்தாள்.

முதல்லே இது யாருன்னு நான் சொல்லிடுறேன். மதுரையிலே என் கடையிலே வேலே பார்க்கிற கணக்குப் பிள்ளை. சுந்தரம்னு பேரு. சொந்த ஊரு தென்காசிப்பக்கம். ஒரு கிராமம். அப்பா அம்மா. யாரும் இல்லே. நல்ல தங்க மான பையன். நீ மயிலே யாரு கையிலாவது புடிச்சிக் கொடுக் கணும்னு சொன்னதும் எனக்கு சுந்தரம் நெனேப்பு வந்தது. ஆளே அறிமுகப்படுத்திக்கிட்டே சொல்லாம்னுதான் நான் அன்னேக்கு உன்கிட்டே சொல்லலே. இப்ப சம்பளம் மாதம் 120 ரூபாதான். கல்யாணம் ஆனதும் 150 போட்டுக் கொடுக் கலாம். எனக்கு சொந்தமான சின்னவீடு மதுரையிலே ஒண்னு இருக்கு. அதிலே நீங்க குடியிருக்கலாம். நீயும் அங்கேயே போயி ஒண்ணு இருக்கலாம். இங்கே இருந்து ஒண்டியா ஏன் கஷ்டப்படனும்? அங்கே போயும் உன் வழக் கமான இட்டிலி வடை முறுக்கு பிசினஸை நடத்தேன். யாரு வேண்டாமுங்கா? அதுமூலம் கிடைக்கிற பணம் குடும்பச் செலவுக்கு உதவுமே. பின்னே என்ன ? இப்ப சுந்தரத்துக்கு முப்பத்துமூணு வயசு ஆகுது. வயசைப்பத்தி என்ன? ஆளே பாக்கையிலே அந்த வயசு தோணவா செய்யுது? எனக்கு கல்யாணம் நடக்கையிலே முப்பத்தஞ்சு வயசு. வயது வித்தி யாசம் ஒண்னும் முக்கியம் இல்லே. மனம்தான் நல்லாயிருக் கணும். அம்மா மயிலு, சுந்தரத்தை நல்லப் பார்த்துக்கோ. உன் மனசிலே ஏதாவது இருந்தா அதையும் தைரியமா சொல்லிப்போடு. அப்புறம், எங்கேயோ இருந்து வந்த கிழவன் கெடுத்திட்டான் வச்சிட்டான்னு நீ கண்ணே கசக்கப் படாது...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/229&oldid=589488" இலிருந்து மீள்விக்கப்பட்டது