பக்கம்:நினைவுச்சரம்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

龙3{} நினைவுச்

இப்படி ஏன் நீங்க சொல்லுதீக ?? என்று அவசரமாய் குறுக்கிட்டாள் செண்பகம். மயிலு உங்க குழந்தைமாதிரி. அவளுக்கு நல்லதைத்தான் நீங்க செய்வீங்கன்னு அவளுக்கே தெரியாதா?’ என்ருள்.

மயிலு, சுந்தரத்தைப்பாரு என்று அவர் சொன்ன துமே, கண்களே சுழட்டி ஒரு பார்வை பார்த்துவிட்டு, வெட்கத்தேர்டு அடுக்களேக்குள் ஒடிவிட்டாள் அவள். அப்புறம் சாம்பார், ரசம் எல்லாம் செண்பகம்தான் பரிமாற வேண்டியதாயிற்று. நல்ல வார்த்தை சொல்லி, தாங்கி, பாயசம் படைக்கும்படி அவளே அனுப்பிவைத்தாள் அம்மா. அவள் நடந்து வந்து இரண்டு இலைகளுக்கும் பாயசம் பரிமாறுவதற்குள் அடைந்த வெட்கமும், திணறிய திணறலும் - ஐயோ பாவம் ! -

சாப்பாடு ரொம்ப திருப்திகரமாக நடந்து முடிந்தது.

செண்பகம் இலைகளே எடுத்துத் தெருவில் வீசிவிட்டு, இடத்தை சுத்தம் செய்தாள். வேறு இடத்தில் பாயை விரித்து, வெற்றிலேப் பாக்குத் தாம்பாளத்தையும் முன் வைத்தாள்.

இருவரும் மரியாதைக்காகக் கொஞ்சம் வெற்றிலே எடுத் துக்கொண்டார்களே தவிர, போட்டுக் கொள்ளவில்லே.

செம்பகம் அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை நடத்திவிடுவோம். நீ சொன்னபடி, கோயிலிலோ குத்து விளக்கு முன்னலோ வச்சு தாலியை கட்டிப்போடலாம்தான். இதிலே எல்லாம் அவங்க அவங்க மன உறுதியும் நம்பிக்கை யும்தான் முக்கியமே தவிர, சடங்கு சம்பிரதாயம் ஊர்ச்சாப் பாடுங்கிறதெல்லாம் அநாவசியமான, அதிகப்படியான, வெளிச்ச ஆடம்பர விஷயங்கள்தான். இருந்தாலும், மயிலு சுந்தரம் கல்யாணத்தை நம்ம வீட்டிலேயே வச்சு நடத் தனும்னு எனக்கு ஒரு ஆசை. அந்த வீட்டிலே இதுவரை ஒரு கல்யாணம்கூட நடைபெற்றதில்லை. என் கல்யாணம் அதில் நடக்கும்னு அம்மை ஆசைப்பட்டா. அது நிறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/230&oldid=589489" இலிருந்து மீள்விக்கப்பட்டது