பக்கம்:நினைவுச்சரம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச்

2

3

2

25

- ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தனித்தன்மை இருக் கிறது. சில வீடுகள் சிறுசாக இருந்தாலும், ' சதா சிரிச்ச முகமும் சீதேவியுமா? என்பார்களே, அதுமாதிரியான ஒரு தன்மையைக் கொண்டிருக்கும். அந்த வீட்டை பார்க்கை யிலும், அதில் வசிக்கையிலும் மனசுக்கு ஒரு நிறைவு ஏற்படும்.

சில வீடுகள் பெரிசாக இருக்கும். ஆலுைம் அழுதுவடிகிற மாதிரி இருக்கும். உள்ளே போகிற நம்ம மனசையே: இருளடிக்க வைக்கும். சில வீடுகளே எட்டிப் பார்த்ததுமே நம்முள் ஒருவித சோகம் வந்து கப்பிக்கொள்ளும். சில வீடு களின் அமைப்பு அர்த்தமற்ற குழப்பத்தையும், இரவு நேரங் களில் ஒருவித அச்சத்தையும் தந்துகொண்டே இருக்கும். அதெல்லாம் வீட்டின் வாகு’. வீடு கட்டப்படுகிறபோதே. சேர்ந்து அமைந்துவிடுகிற ஒரு தனித்தன்மை.

இந்த வீடு எப்பவும் ஒளி நிறைந்ததாய், மனசுக்கு, அமைதி தருவதாய், புதிய புதிய சந்தோஷங்களே தர முடியாவிட்டாலும், இருக்கிற சந்தோஷத்தை சீர்குலேக்காத, தாய் , அன்பு நிறைந்ததாய் இருக்கிறது. -

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு ஆத்மா உண்டு என்று சொல்லலாம். மனுஷங்களுக்கு உள்ள மாதிரி ஆத்மா என் றில்லை. அந்த வீட்டில் வசித்த-வசிக்கிற-மனிதர்களின் எண்ணங்கள், ஆசைகள், கனவுகள், நம்பிக்கைகள், செயல்கள் முதலியவை எல்லாம் அவர்கள் வசித்த-வசிக்கும் சூழலில் தனது சின்னங்களே, நிழல்களே, பாதிப்புகளே அரூப: மான முறையில் விட்டுச் செல்கின்றன. அவையே அந்த வீட்டுக்கு ஒரு ஜீவன்-உயிர்களே-உண்டாக்குகிறது. அது தான் அந்த வீட்டின் ஆத்மா என்று நான் நினைக்கிறேன்.

இந்த வீட்டில் அப்பாவின் தாக்கங்களேவிட, அம்மை யின் பாதிப்புகளே அதிகம் படிந்துள்ளன. என் எண்ணங்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/232&oldid=589491" இலிருந்து மீள்விக்கப்பட்டது