பக்கம்:நினைவுச்சரம்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 237

செண்பகம் மகளோடும் மருமகனேடும் மதுரைக்குப் புறப் பட்ட அன்று, அவர்களே வழியனுப்ப ஜங்ஷனுக்குப் போனர் பெரியபிள்ளே.

ஐயா, நீங்களும் எங்ககூட வாங்க. ஊரிலே தனி விட்டிலே, ஒத்தையிலே இருந்து என்ன செய்யப்போlங்க ?? என்று செண்பகம் வேண்டினுள்.

ஒத்தையா?’ என்று கேட்டுச் சிரித்தார் பிள்ளே. அந்த வீடு எனக்கு வெறும் வீடு இல்லே, செம்பகம். அது எனக்கு உடன் பிறப்புமாதிரி. உற்ற சிநேகிதன்மாதிரி. எனக்குத் துணை அந்த வீடு. அந்த வீட்டுக்குத் துணை நான். என்னப் பற்றி யாருமே கவலேப்படவேண்டாம் என்ருர்.

சொக்கையாவுக்கு நான் எல்லாம் எழுதியிருக்கேன். அவன் உங்களுக்குத் தேவைப்படுகிற உதவிகள் எல்லாம் செய்வான். மீனுட்சியும் நல்லவதான். கொஞ்சம் பட படப்பா, கோபக்காரியா தென்படுவா. ஆல்ை, உள்ளத் திலே நல்ல குணம். சுந்தரம், மயிலேயும் அவ அம்மையையும் கவனிச்சுக் காப்பாத்தவேண்டிய பொறுப்பு உனக்குத்தான்? என்று கூறினர்.

ரயில் நகர்ந்தது. வேகம் பெற்று ஓடியது.

சிவபுரம் வீட்டை நினைத்துக்கொண்டு ஸ்டேஷனைவிட்டு வெளியே வந்தார் மயிலேறும் பெருமாள்பிள்ளே.

( முற்றும் )

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/237&oldid=589496" இலிருந்து மீள்விக்கப்பட்டது