பக்கம்:நினைவுச்சரம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

2 நினைவுச்

கும்; அல்லது, ஒரு இலை ஏழு காசு எட்டுக் காசுன்னு கொள்ளே விலே சொல்லுவான் என்று பிறவிப்பெருமாள் புலம்பினர்.

'ஏன், இப்போ இங்கே வாழைத்தோட்டமே கிடை யாதா? யாரும் வயல்களில் வாழை போடலியா??

'ரெண்டு மூணு பெரிய புள்ளிகள் வாழை பயிரிடிருக்காங்க. அவங்க அதை குத்தகைக்கு விட்டுட்டாங்க.குத்தகைக்காரங்க இலேகளே அவ்வப்போது வெளியூருக்கு அனுப்பிவிடுருங்க. வாழைக்காய் குலைகுலையா லாரிகளிலே ஏற்றப்பட்டுப் போகத் தான் செய்யுது. பெங்களுருக்குப் போறதாப் பேசிக்கிடுருங்க. எந்த ஊருக்குப் போகுதோ! நம்ம ஊரிலே வாழைக்கா, வாழை இலக்கு எப்பவும் பஞ்சமும் தட்டுப்பாடும் தான்’ என்று புலப்பத்தை தொடர்ந்து வளர்த்தார் பிறவியாபிள்ளை.

"நான் இந்த ஊரிலேயே இருந்தபோது அப்படி இல்லே. வாழை பயிரிட்டிருந்தவங்க, முதல்லே இந்த ஊர் தேவை களேத்தான் கவனிப்பாங்க. இலே, வாழைப்பூ, வாழைக்கா எல்லாம் தினசரி தெருக்காட்டிலே விற்பனேக்கு வரும். அடுத்த வீடு, பக்கத்து வீடுகளுக்கு பூ, இலே எல்லாம் சும்மாவே கொடுப்பாங்க. மரம் சாய்ஞ்சிட்டா, அல்லது வெட்டுற சேன்லே, வாழைத் தண்டை அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் சொந்தக் காரங்களுக்கும் தாராளமாக் கொடுத்து அனுப்புவாங்க. காசு கொடுத்தால் கூட வாங்கிக் கிட மாட்டாங்க. அவங்க காசு, பணமின்னு ஆலாப் பறக்கலே. நாமும் நல்லாருக்கனும், நம்மை சேர்ந்தவங் களும் நல்லாயிருக்கணும்னு விரும்பினங்க. அப்போல்லாம் காலணு, அரையன, கால் துட்டு, முக்காத்துட்டு என்கிற கணக்குத் தானே. காலணுவுக்கு ஒரு பூட்டு இலே-அஞ்சு இல, கிடைச்சுது. சில சமயம் ரெண்டு பூட்டுகூடக் கிடைக் கும். காலணுங்கிறது முக்கால் துட்டு. மூணு கால் துட்டு. அதாவது, மூணு தம்பிடி...ஊம்ம். அந்தக் காலம் மலே ஏறிப் போச்சு!’ என்று பெருமூச்சு விட்டார் பெரியவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/32&oldid=589276" இலிருந்து மீள்விக்கப்பட்டது