பக்கம்:நினைவுச்சரம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நினைவுச்

வித்து முடிச்சிருவான். காசுக்குத்தான் விற்பான். அரிசிக்குத் தரமாட்டான். கீரை நல்ல ருசியாயிருக்கும். ஆதனுலே. கயத்தாத்துக்காரன் எப்ப வருவான், எப்ப வருவான்னு எல்லாரும் காத்துக் கிட்டிருப்பாங்க என்று பிறவிப்பெருமாள் விளக்கினுர்,

'கயத்தாறு ஊரு இங்கிருந்து பத்து மைல் இருக்காது ?? 'எட்டு மைல் இருக்கும்.’ ‘அங்கே கீரை பயிரிட்டு இங்கே கொண்டாந்து விக்கிருன் ஒருத்தன் ! சைக்கிள்லெயே வந்து!’

'பக்கத்து ஊருகளிலும் விற்கத்தான் செய்வான். நிறைய கீரை பயிரிட்டிருப்பான். உதவிக்கு வேறே ஆள்களும் இருக் கும். ஒவ்வொரு ஆளு ஒவ்வொரு ஊரை கவனிச்சுக்கிடு ாங்க. இது அவங்களுக்கு நல்ல பிசினஸ். லாபகரமாகத்

‘இருக்கும் இருக்கும். இல்லாமலா இவ்வளவு சிரமப்படு வான் ?? என்ருர் மனு, பெனு.

'ரெண்டு வருஷத்துக்கு முன்னுடி, கோட்டூரிலிருந்து நம் மூருக்குக் கீரை வந்துக்கிட்டிருந்தது’ என்று சிவகாமி சொன்னுள்.

’பாளேயங்கோட்டை பக்கம் இருக்கே கோட்டுரு, அங்கே யிருந்தா?’ என்று பெரியவர் கேட்டார்.

ஆமா. அங்கே வயல்லேயே கீரையை பயிரிட்டிருந்: தாங்க. ஆம்பிளேயும் பொம்பிளேயும் தலைச்சுமையா சுமந்து, ஊர் ஊராக் கொண்டுபோய் வித்தாங்க. அரிசிக்கும் காசுக்கும் கொடுத்தாங்க. அப்புறம் அங்கே வயலிலே பெரும் அளவிலே ಹೈ। பயிர் பண்ணுவதை விட்டுட்டாங்க? என்று பிறவியா பிள்ளே சொன் னுர்.

மோர் சாதத்துக்காக இல்ே நடுவே சாதத்தை இழுத்து. வைத்த பெரிய பிள்ளையிடம், சோத்தை ஒதுக்கிக்கிடுங்க. பாயசம் இருக்கு என்று சிவகாமி அறிவிக்கவே, அவர் போடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/34&oldid=589278" இலிருந்து மீள்விக்கப்பட்டது