பக்கம்:நினைவுச்சரம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 37

பண்ணத் தெரியும் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்க லாம். அந்த அனுபவம் எனக்கு நிறையவே உண்டு. அதுக் கான ஏற்பாடுகள், தேவைகளோடுதான் நான் வந்திருக் கேன். அதனலே, சாப்பாடு விஷயமா இனிமே நீயும் தம்பியா பிள்ளேயும் என்னை உபசரிக்கவேண்டாம். உங்க வீட்டிலே சாப்பிடலியேன்னு வருத்தப்படவும் வேண்டாம் என்று பெரிய பிள்ளே கண்டிப்பாக அறிவித்துவிட்டார்.

உம். உங்க இஷ்டம் என்று இழுத்து சிவகாமி தன் வேலேயில் ஈடுபட்டாள்.

நான் வாறேன் ? என்று கூறி, மயிலேறும் பெருமாள் பிள்ளே தன் வீட்டுக்கு நடந்தார்.

வாசல் நடை வரை வந்து அவரை வழியனுப்பிய பிறவிப் பெருமாள், அவர் கூடவே அவரது வீடுவரை போகலாமா என்று எண்ணி, பிறகு வேண்டாம் என்று முடிவு செய்து, காலே தேய்த்துக்கொண்டு அந்த இடத்திலேயே நின்று விட்டார்.

4.

‘நம்ம ஊருக்கு வேண்டிய கீரைகூட பக்கத்து ஊரிலிருந்: துதான் வரவேண்டியிருக்கிறது என்ற உண்மை மயிலேறும் பெருமாள் பிள்ளையை ரொம்பவும் சங்கடப்படுத்தியது.

இந்த ஊரில் இலே கிடைப்பதில்லே ; காய்கறி வேண்டு மானுல் டவுனுக்கு ஓடவேண்டும்; நாலேந்து நாட்களுக்குத் தேவையான காய்கறி வகைகளே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் ; திடீர் விருந்தாளி வந்தா, வாய்க்கு ருசியா, வகைக்கறியோடு ஆக்கிப்போட முடியாது; இருக்கதை வச்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/37&oldid=589281" இலிருந்து மீள்விக்கப்பட்டது