பக்கம்:நினைவுச்சரம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரம் 55

வாலிப மயிலேறு இதை எல்லாம் ரசிக்கத்தான் செய்தான் என்ருலும், காசுக்குப் பெண் இன்பம் தர அந்தி வேளையிலே பூத்து நின்று சைகைகள் செய்யும் மோகினிகளை நாடிப் போக அவன் துணிந்ததில்லை. அவனுக்கு உள்ளுற இருந்த ஒருவித :பயமே காரணம்.

உள்ளூரிலேயே தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய திறமையாளர்களும், அவர்களது அரிப்புக்கு ஈடு கொடுக்கக்கூடிய பொம்பிளேகளும் இருக்கத்தான் செய் தார்கள். வீட்டோடு இருக்கும் குல மகளிரை மட்டுமல்லாது, வயல்களில் வேலே செய்யும் உழத்தியரை, தோட்டக்கசடு களில் ஏதாவது அலுவல் புரிந்து திரியும் சில்லரை சாதிப் பெண் 'களே, வாசல் பெருக்கி வீட்டு வேலேகள் செய்யவரும் வேலைக்காரிகளே எல்லாம் தாஜா செய்து தரும காரியங்களே ? தந்திரமாக முடித்துக்கொண்டு நல்லவர்போல் வாழும் சாமர்த் தியசாலிகளும் இருந்தார்கள். அவர்களைப் பற்றிய பேச்சுக்கள் உள்ளுர் பிரமுகர்களின் மகாசபையில் அடிபடாமலுமில்லை.

ஊர் உலகத்தின் போக்கு இவ்வாறெல்லாம் இருந்த போதிலும் கூட, இளவயது மயிலேறு உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லாதவனுகவே வளர்ந்தான். அவனுடைய உள் ஞறை பண்புகளும் பயங்களுமே அவனுக்குப் போதிய பாது காப்புகளாக அமைந்திருந்தன. -

ஆகவே, தனித்து ஒதுங்கி வாழ அவனுக்கு அந்த வீடு தான் எல்லாமாக இருந்தது. அவனுடைய அன்பு, ஆசை, அபிமானம் அனைத்துக்கும் ஈடு கொடுக்கக்கூடிய பிரியப் பொருளாகவும் இருந்துவிட்டது. அது.

வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் அவனது பொழுதில் கணிசமான பகுதி கழியும். அடிக்கடி, அந்த அறையில் இருப்பதை எடுத்து இந்த அறையில் அடுக்குவது, இந்த அறையில் கிடந்ததை எடுத்து இன்னுெரு அறையில் போடுவது என்ற தன்மையில் அவன் தனது தனிமைச் சலிப் பைப் போக்கடிக்க ஏதேனும் வேலை ஏற்படுத்திக்கொள்வான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/55&oldid=589299" இலிருந்து மீள்விக்கப்பட்டது