பக்கம்:நினைவுச்சரம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நினைவுச்

யில்லேன்னு தான் சொல்லணும். சவம் எக்கேடும் கெடட்டும்’ என்று சமூகப் பெரியவர்களும் ஒதுங்கி விட்டார்கள்.

சேலே கட்டிய மரப்பாச்சி யை கொண்டுவந்து வீட்டுக் காரி ஆக்கி, வீட்டின் அமைதியையும் தனது வாழ்நாளேயும் சீர்குலேத்துக்கொள்ள ஆசைப்படாத மயிலேறும் பெருமாள் தனக்குத் தேவையான உணவுகளைத் தானே தயாரிக்கக் கற்றுத்தேர்ந்தான். தண்ணிர் எடுத்துவர, வீடு பெருக்க மெழுக, தோசைக்கு அரைக்க, பாத்திரங்கள் கழுவ என்று அரையேரைக்கால் கிழவியான ஒரு அம்மாளே ஏற்பாடு செய்திருந்தான்.

முப்பது வயது வரை சிவபுரத்தில் அவன் வாழ்க்கை நிம்மதியாக நடந்துகொண்டு தானிருந்தது. அவனே எதிர் பாராத ஒரு திடீர் நிகழ்ச்சி அவனது வாழ்க்கையை அடியோடு மாற்றி அமைக்கும் அஸ்திவாரம் ஆயிற்று. அவன் அந்த ஊரை விட்டே வெளியேற நேர்ந்தது. -

அப்படிப் போவதற்கு முன்ல்ை, அவனுடைய அம்மா 'தாரம்பு மாமா-நாரம்பு மாமா என்று அவனுக்கு அறிமுகப் படுத்தி, ஒரளவு அன்புகாட்டும்படி பழக்கியிருந்த நாறும்பூநாத விள்ளேயிடம் வீட்டை கவனித்துக் கொள்ளுமாறும், வயல்களை மேல்பார்த்து ஆவன செய்யும்படி அவன் கேட்டுக்கொண் டான். என்ன செய்யப்போறே? எங்கே போகப் போறே? யாரை பார்ப்பே? உனக்கு யாரை தெரியும்? என்று தூண்டித் துருவி விசாரித்த அவர்தான், அவனுக்கு ஒரு வழியும் காட்டினர்.

'மதுரைக்குப் போ. அங்கே எனக்கு வேண்டியவர் ஒருத்தர் வெள்ளிக்கடை வச்சிருக்காரு. நல்ல வியாபாரம். நான் சொன்னல் தட்டமாட்டாரு. நீ அவரிடம் போய் சேரு. உனக்கு ஒரு வேலை போட்டுக் கொடுக்கும்படி நான் காயிதம் எழுதித் தாறேன்’ என்ருர். அப்படியே செய்தார்.

பையனப் பற்றியும், பையனின் குடும்ப உயர்வுபற்றியும், அவனது குண நலன்கள் பற்றியும் விவரமாக எழுதி, தாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/58&oldid=589302" இலிருந்து மீள்விக்கப்பட்டது