பக்கம்:நினைவுச்சரம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 67

குடிக்கவும் இயலாது. வே, அப்படிக் குடிக்கிற சக்தி இருக்கு துன்னே வச்சுக்கிடுவோம். வாறவன் போறவனுக்கெல்லாம் இவ்வளவு பெரிய தம்ளர் முட்ட காப்பி கொடுத்துக் கட்டுப்படி யாகுமா? வீடு விட்டுப்போயிருமே வேய் ! இப்போ நம்மள வங்களுக்கு கொடுக்கிற சக்தியும் குறைஞ்சு போச்சு. அதை யும் மறந்திரப்படாதுல்லே! தாராள மனசும் குறைஞ்சுக் கிட்டே வருது. இதையும் சொல்லத்தான் வேணும்.

பெரிய குத்துவிளக்கை எடுத்து-அதாவது, பூட்டு பூட் டாகக் கழற்றி வைக்கப்பட்டிருந்த விளக்குப் பகுதிகளை எடுத்து, ஒன்ருக இணைத்து-நிறுத்திவைத்து அழகுபார்த். தார்.

- ரொம்ப லெட்சணமான விளக்கு, இதே ஒரு குமரிப் பொண்ணுமாதிரி இருக்கு. பதிமூணு, பதிலுை வயசுப்புள்ளெ உசரத்துக்கு. அதாவது, நல்ல வளர்ந்த புள்ளே. இப்ப புள்ளைகள் நறுங்கிப்போயி, உயரமா வளராமல், தேவாங்கும். தெல்லாங்குஞ்சுகளுமாக அல்லவா இருக்கு ! இப்போ பதி மூணு வயசுப் புள்ளைகளிலே அநேகம் இந்த விளக்கு வெயிட்” இருக்கவே இருக்காது...

அவருடைய அம்மா அந்த விளக்கை துடைத்துக் குளிப் பாட்டுகிற காட்சி அவர் நினைவில் எழுந்தது.

ஒரு சொளகு நிறைய உமி எடுத்துக்கொள்வாள். காலே நீட்டிக்கொண்டு உட்கார்ந்து, உமியைக் கொஞ்சம் கொஞ்ச மாக எடுத்து, விளக்கின் ஒவ்வொரு பூட்டையும் (பகுதியை யும்) தனித்தனியாக உமிக் குவியல்மீது வைத்து, தேய் தேயென்று தேய்ப்பாள். உமி நொறுங்கித் துாளாகிக் கறுப் பாகிவிடும். விளக்குப்பகுதி பளபளவென்று மிளிரும். இப்படி, விளக்குப் பூராவையும் மினுமினுக்கப் பண்ணியதும், சொளகு, முட்ட இருந்த உமி எதுக்கும் பயனற்ற தூசியாய், பொடி யாய், கறுப்புக் குவியலாகிப் போகும். அதை உரக்குழியில் கொட்டவேண்டியதுதான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/67&oldid=589311" இலிருந்து மீள்விக்கப்பட்டது