பக்கம்:நினைவுச்சரம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ நினைவுக

விளக்கை அப்புறம் தண்ணிரில் அலம்புவாள். தண்ணிர் வடியட்டும் என்று அனைத்தையும் தனித்தனியே சுவர் ஒரத்தில் வைப்பாள். விளக்கை சாம்பல் வைத்தோ, புளி தேய்த்தோ கழுவக்கூடாது; கெட்டுப்போகும் என்று அவள் சொல்லுவாள். ரொம்ப நேரத்துக்குப்பிறகு, நல்ல துணி கொண்டு விளக்கைத் துடைத்து, பூட்டு பூட்டாக எடுத்து மாட்டி நிறுத்துவாள். குளித்து முடித்த சின்னப்பொண்ணு மாதிரி அது கண்ணுக்குக் குளுமையாக விளங்கும்.

பஞ்சை எடுத்துத் திரிதிரிப்பாள். அம்மாதிரிதிரிப்பதே கல்யாக இருக்கும்.

திரிகளை விளக்கில் போட்டு, எண்ணெய் ஊற்றில்ை, புதுப்பொலிவோடு விளங்கும் அது. -

நன்ருக இருட்டுவதற்கு முன்னடியே- மூந்திக் கருக் கல்லே -குத்துவிளக்கு ஏற்றப்படும். விளக்குக்கு அழகாகக் குங்குமப் பொட்டு இடப்படும். விளக்குச்சரம் அணியப்படும். எரிகிற குத்துவிளக்கு ஒரு புனிதத் தோற்றம். இனிய, குளுமைக்காட்சி. - ---

- எலெக்ட்ரிக் லேட்டும் நாகரிகமும் வந்துவிட்ட பிறகு பெண்கள் குத்துவிளக்கை பொருத்திவைப்பது வீண் வேலை என்று விட்டுவிட்டாங்க. இருந்தாலும் பல குடும்பங்களில் இப்பவும் குத்துவிளக்கு ஏற்றிக் கும்பிடும் வழக்கத்தை விடாமல் அனுஷ்டிக்கிருங்க. அந்தக் காட்சி கண்ணுக்கு நிறைவா, மனசுக்கு இதமா இருக்கு. அநேக வீடுகளிலே தினசரி பூ சாற்றுவதில்லே. பல வீடுகளிலே பேருக்கு விளக் குச்சரம் அணிவிக்கிருங்க. இம்புட்டுப்போலே. அல்லது, அலக் அலக்கா, பூவு, இலே, பூவு என்று வச்சுக்கட்டின சரம். அதெல்லாம் அவ்வளவு நிறைவாயில்லேன்னே சொல் லணும். .

-ஒருசமயம் ஒரு வீட்டிலே பார்த்தேன். பெரிய விளக்கு தான். அதாவது சராசரி உயரமுள்ள குத்துவிளக்கு. முடியிலேயிருந்து பாதம்வரை மல்லிகைப் பூச்சரம். குண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/68&oldid=589312" இலிருந்து மீள்விக்கப்பட்டது