பக்கம்:நினைவுச்சரம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 69.

குண்டா, நெருக்கமா வச்சுக் கட்டப்பட்ட சரம், போட்டிருந்: துது. பொட்டிட்டு, அப்படி பூச்சூடி, குளுமையா எரிந்து, கொண்டிருந்த விளக்கை பார்க்கையிலே சிங்காரமா திக்கிற. சிறு பெண்ணே பார்க்கிற மாதிரியே இருந்துது. குளுகுளுன்னு, சந்தோஷமா இருந்துது. அந்த வீட்டிலே சாமி படங்கள் எல்லாத்துக்கும் அப்படியே சரம் சாத்தியிருந்தாங்க. இது. ஒருநாள் வேலே இல்லே ; தினசரிப் பழக்கமேதான் என்று தெரிஞ்சுகிட்டேன். அந்தக் குடும்பத் தலைவியும், வீட்டுப் பெண்களும் தினசரி தலைக்கு நிறையப் பூவச்சு, ஸ்டைலாகத் தொங்கப் போட்டு மினுக்கிக் கொள்ளலே. அந்த ஆசை அவங்களுக்கு இருந்ததாகத் தெரியலே. ஆன, குத்து விளக் குக்கு தினந்தோறும், அடுக்கு அடுக்காக் கட்டப்பட்ட மல்லி கைப்பூச்சரம் அணிவித்து அழகு பார்த்தாங்க. அந்தத் திருக்கோலம் எனக்கு ரொம்பவும் புடிச்சிருந்தது. இப்பகூட அது என் கண்ணிலே நிக்குது.

அதே மாதிரி தன் வீட்டுக் குத்துவிளக்குக்கும் தினம் பூ. அணிவிக்க வேண்டும் என்று மன. பென. ஆசைப்பட்டார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

சிவபுரத்திலிருந்து நாள்தோறும் ஜங்ஷனுக்குப்போய், பூக்கூடத்தில் பூ ஏலம் விடப்படுகிற சமயத்தில் பலவிதமான பூக்களேயும் வாங்கி வந்து சரங்களாகவும் ஆரங்களாகவும் கட்டி, கோயிலுக்கும் சில பிரமுகர்கள் வீடுகளுக்கும் விநியோ கித்து, பணம்பெற்றுப் பிழைப்பு நடத்திக்கொண்டிருந்த ஒதுவார் ஒருவரிடம் சொல்லிவைத்தார். தினம் தனக்கென ஒரு விலக்கு நல்ல மல்லிகைப் பூவை ஏலம்கேட்டு வாங்கி வந்து, அடுக்கடுக்காக அமைத்து நீளமான சரமாகக் கட்டித். தரவேண்டும்; பூ விலைக்கான பணத்தையும் சரம் கட்டித் தருவதற்கான கூலியையும் மொத்தமாகவோ, அல்லது அவ் வப்போது தேவைப்படுகிறபோது சில்லறையாகவோ வாங்' கிக்கொள்ளலாம் என்று சொல்லி, முன்பணமாக ஐந்து ரூபா யும் கொடுத்தார். அவனும் மகிழ்ச்சியோடு இந்த ஏற்பாட் டுக்கு இணங்கின்ை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/69&oldid=589313" இலிருந்து மீள்விக்கப்பட்டது