பக்கம்:நினைவுச்சரம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 7;

குத்துவிளக்கு ஏற்றிவைத்த தினத்தன்று, வீட்டுக்கு வந்தவர்களுக்கெல்லாம், பூம்பருப்பும் காப்பியும் வழங்கினர். வழக்கமாக வருகிறவர்களே முன்னிரவில் அவசியம் வருமாறு

அழைத்திருந்தார். -

‘அண்ணுச்சி வீட்டோடு வந்துவிட்டதும், அவரை கண்டு பேசிப்போக வெவ்வேறு வேளைகளில் சிலசில பேர் வந்து அரைமணி-ஒரு மணி என்று தங்கிச் செல்வதை வழக்கமாகிக் கொண்டார்கள். சுகவாசி சூரியன் பிள்ளே முற்பகலில் ஒன்பதரை-பத்துக்கு வந்தால், பன்னிரண்டு மணிக்கு மேல்தான் போவார். பிறவியா பிள்ளை ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தரம் எட்டிப் பார்த்துவிட்டுச் செல்வார். பால்வண்ணம் பிள்ளை என்ருெருவர் மத்தியானச் சாப்பாட் டுக்கு மேல் வருவார். அமைதியாகப் படுத்துத் தூங்குவதற்கு அண்ணுச்சி வீடு அருமையான இடம் என்று அவர் கண்டு கொண்டார். அண்ணுச்சிகூடப் பேச்சு கொடுத்தபடிஅண்ணுச்சியின் பேச்சை ஊம்...உம்' என்று கேட்டபடியே -தூக்கத்தில் ஆழ்ந்து விடுவார். அப்புறம் நாலு மணிக்குப் பிறகுதான் விழிப்பு வரும்.

இப்படி ஒவ்வொரு நோக்கத்தோடு வீடு தேடிவரும் நபர் கள், அவர்கள் தன்னே கண்டுபோக வருகிறவர்கள், தன்னை கெளரவிக்கிருர்கள் என்பதோடு, தனது புரவோலங்களே, தான் உலுப்புகிறபோது பொறுமையாய் கேட்டிருப்பதன் மூலம் தனக்குப் பெருமை தருகிருர்கள்; அத்துடன் அவர வருக்குத் தெரிந்த ஊர் விவகாரங்கள், மனித அக்கப்போர் களே எல்லாம் சொல்லி சிவபுரம்பற்றிய தனது அனுபவ ஞானம் விசாலிக்கும்படி செய்வதன் மூலம் தனக்கு சந்தோ வடிமும் அளிக்கிருர்கள் என்பது மன. பென.வின் ஆனந்தக் களிப்பு. பேச வருகிறவர்களுக்கு மட்டுமா பொழுதுபோகிறது? தனியணுய் இருக்கும் தனக்கும் பொழுதுபோக அவர்கள் உதவுகிருர்கள் தானே! வேளை கெட்ட வேளைகளில் *அண்ணுச்சியோவ்! என்ன பண்ணு தீக?’ என்று கேட்டபடி எட்டிப்பார்க்கும் தம்பியா புள்ளே களைக் கண்டதும், சவத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/71&oldid=589315" இலிருந்து மீள்விக்கப்பட்டது