பக்கம்:நினைவுச்சரம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நினைவுச்

ஸைடுகளிலே இந்த நெருக்கடி நிலைமை அதிகம். வாழ்க்கை விசித்திரங்களிலே இதுவும் ஒண்ணு. வாழ்க்கைக் கொடுமை, பின்னு சிலபேரு சொல்லுவாங்க, ஏதோ ஒண்னு

மன. .ெ கு. மறுபடியும் நெடுமூச்சுயிர்த்தார். எழுந்து இருட்டிலேயே அப்படியும் இப்படியும் மெதுநடை போட லானர். அவர் மனமும் ஊர்ந்து கொண்டிருந்தது.

-ஏ, நீ லேசாச் சொல்லிப்போட்டே, நெய்யில்லா உண்டி பாழ்னு ! -

எந்தக் காலத்திலோ பாட்டிலே புலம்பி வைத்துவிட்டுப் போன ஆத்மாவை நேரே கூண்டில் ஏற்றிக் குறைகூறுவது போல் அவர் மனம் கனன்றது. - .

- இந்த ஊர்லே இப்ப எத்தனை வீட்டிலே தெய்யோடு சாப்பாடு நடக்கு? வசதியான குடும்பங்கள் ரெண்டு அல்லது மூணுலேதான் இருக்கும். ஏ, அன்ருடச் சாப்பாட்டுக்கே அல்லாடுதாங்களே, ஒவ்வொரு வீட்டிலேயும்; நெய் ஊத்திச் சாப்பிடுறதுக்கு எங்கே போவாங்க? அப்ப உன் கணக்குப்படி, சிவபுரத்திலே முக்கால்வாசி வீடுகளிலே சாப்பிடப்படுகிறதே. உண்டி, அது பாழ் இல்லயா? டே, இன்குெண்ணுல்லா. மத்தியதரவர்க்கத்துக் குடும்பங்கள் நிலேமை எந்தக் காலத் திலும் ஒகோன்னு இருந்தது இல்லே. எனக்குத் தெரியும்அநேக வீடுகளிலே விரதநாள், விசேஷம், விருந்துகள்ளுத் தான் நெய் சேர்த்துக்கிடுவாங்க, அவங்க பொருளாதாரம் அதுக்குத்தான் இடம் கொடுத்துது. அவங்க மேற்படி நாள்கள் அல்லாத இதர நாள்களிலே சாப்பிட்ட உண்டி எல்லாம் பாழ்!” அப்படித்தானே? நீறு இல்லா நெற்றி பாழ்ஆம் சொல்விட் டான்யா. ஏ, இப்போ சிவசமயத்தை சேர்ந்தவங்களே நெத்தியிலே திருநாறு பூசிக்கிடுறது நாகரிகமாயில்லே, அது தேவையில்லேன்னு விட்டுட்டாங்களே. அவங்க நெற்றி எல். லாம் பாழ்னு சொல்லவேண்டியதுதான். உன் கணக்குப்படி, திருநீறு பூசுவதை மதக் கொள்கையாகக் கொண்டிராத இதர பல சமயங்களேச் சேர்ந்த கோடானுகோடி மக்களுடைய நெற்றி பூராவும் பாழ், பாழ், பாழ்தான் 1 இல்லேயா? போடா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/88&oldid=589332" இலிருந்து மீள்விக்கப்பட்டது