பக்கம்:நினைவுச்சரம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் §§

கூறுகெட்டவனே பெரீசா நீட்டி முழக்கிட்டான், பாழே மனேக்கொடி இல்லா மனேயின்னு,

- ஏ, மனேக்கொடி அல்லது குலக்கொடி வந்து தலே யெடுத்து, தான் தான்னு திமிருபுடிச்சு ஆடுறதுேைல எத்தனை மனைகள், எத்தனை குடும்பங்கள், எத்தனே எத்தனை வீடுகள் யாழ்பட்டுப் போயிருக்கு தெரியுமா? இந்தச் சிவபுரம் என்ன, ஒவ்வொரு ஊரிலுமே இதக்கு பிரத்தியட்சப் பிரமாணம் நிறைய உண்டு ... ... போ போ, எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான், படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்கிற கதை தான்.

மயிலேறும் பெருமாள்பிள்ளே தன் திருப்திக்காக இப்படி எண்ணக் காற்ருடியை ஒடவிட்டபோதிலும், அவருடைய மனப்புழுக்கம் தணியவில்லே.

- மனுசங்க பயத்தின் காரணமாத்தான் கல்யாணம் பண்ணிக்கிடுருங்க, குடும்பம் அமைக்கிருங்க, பிள்ளேகுட்டி களே பெறுதாங்கன்னு ஒரு அறிவாளி சொன்னன். அது சரியின்னுதான் சொல்லவேண்டியிருக்கு. தனியா இருக்கிற துக்கு பயந்துபோய்தான் ஒரு வாழ்க்கைத்துணேயை தேடிக் கிடுதான். பேசுறதுக்கு, வேலேகள் செய்றதுக்கு, கூடப்படுத் துக்குறதுக்கு, யோசனைகள் சொல்றதுக்கு, புலப்பங்களேயும் பெருமை பேசல்களையும் கேட்டுக்கொண்டிருப்பதுக்கு எப்பவும் வசதியா ஆள் கிடைக்காமல் போருயிம்கிற உள் பயத்தினலே தான், துணைக்குத் துணையாகவும், வேலைக்காரிக்கு வேலைக் காரியாகவும், தேவடியாளுக்குத் தேவடியாளாகவும், ஆலோ சகருக்கு ஆலோசகராகவும், எல்லாமாகவும், ரொம்ப மலிவா கவும் இருக்கும் என்பதனாலேதான் ஒரு பொம்பிளேயை தேடிப் புடிச்சு கல்யாணம் பண்ணிக்கிடுருனுக. அவளுக என்ன செய்ருளுக? ஆளே எடை போட்டப்புறம் தலேக்கு மேலே ஏறி உட்கார்ந்து சர்வாதிகாரம் பண்ணத் துணிகிருளுக. ஏமாத்துருளுக. புருசனுக்குத் தெரியாம அரிசியை விக்கிறது, சிறுவாடு சேக்கிறேன்’னு திருட்டுத்தனமாப் பணம் சேக் கிறது ; அந்தச் செலவு இந்தச் செலவுன்னு கேட்டு வாங்கி

பூ-108-கி.6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/89&oldid=589333" இலிருந்து மீள்விக்கப்பட்டது