பக்கம்:நினைவுச்சரம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ நினைவுச்

அந்த ரூபாயிலே சுங்கம் வைக்கிறது?-ஏ, இந்தப் பொம். பிளேக எமப்பயபுள்ளேக. ஒவ்வொரு குடும்பத்திலும், எல்லாக் காலத்திலேயும், இப்படித்தான்-இன்னும் எமகாதக வேலே கள் எத்தனையோ-பொம்பிளேக பண்ணிக்கிட்டிருக்காளுக.

மீனுட்சி தன் மனேக்கொடி’யாக வந்திருக்காமல் இருந்: திருந்தால், எவளாவது ஒரு விசாலாட்சி வந்திருப்பாள் ; அல்லது ஒரு காமாட்சி வந்திருப்பாள். எவ வந்திருந்தாலும், செக்கு மாட்டுச்சுழற்சி மாதிரிதான் வாழ்க்கை அமைந்திருக் கும் என்று அவர் எண்ணினர்.

- நான் இந்த ஊரைவிட்டே போகாமல் இருந்திருந்: தால் ?

இருந்திருந்தா வெள்ளிக்கடை முதலாளி ஆகியிருக்க மாட்டேன். ஒரு வெறும் பயலாகவோ வீணனுகவோ ஆகி விருக்கலாம். எவளாவது ஒருத்தி மனேக்கொடி ஆகியிருப்பா. பிள்ளைகளேப் பெத்திருப்பா. புழுபுழுன்னு அரிச்சுப் புடுங்கி, அமைதியை கெடுத்திருப்பா. கடன் கடன்னு வாங்கி வண் டியை ஒட்டியிருப்பேன். வயலே ஒத்தி வையி-அடமானம் வையி-பிறகு வித்துத் தலேமுழுகு. வாழ்க்கை நடக்கணும்லா வேய் செலவுகள் ஒடனுமே. பணத்துக்கு எங்கே போறது? சரி, வீடு இருக்கா? அதுமேலே கடன் வாங்கு. ஒத்திவச்சு இன்னும் வாங்கிச் செலவு பண்ணு. பிறகு வீட்டையும் வில்லு. டினேக்கொடி ஏசிக்கிட்டே இருப்பா. என்னே எங்க அப்பா பாங்கினத்துலே புடிச்சுத் தள்ளிட்டோளேன்னு புலம்புவா. புருசன் செத்துப்போன பிறகுகூட மனேக்கொடிகள் சும்மா விட்டுவிடுவதில்லே. அடங்க ஒடங்க அடிச்சிக்கிடுவாளுக: அவன்-இவன்னு கூடச் சொல்லி ஏசுவாளுக. பாவிமட்டை, இருக்கையிலேயும் கெடுத்தான்-செத்தபிறகும் திண்டாடும் படி பண்ணிப் போட்டானேங்கிற ரீதியிலே, ஏய், பொம்பிளே களுக்கு மனதிருப்திங்கிறது வரவே வராது. ஆம்பிளேகளுக்கும் மன திருப்திங்கிறது லேசிலே வராதுதான், இது பொது மனுஷ சுபாவம். இருந்தாலும், அபூர்வமா சிலபேரு சந்தோ கைமா, மன நிறைவோடு, இருக்கிறதைக் கொண்டு திரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/90&oldid=589334" இலிருந்து மீள்விக்கப்பட்டது