பக்கம்:நினைவுச்சரம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் - 93.

கைகள் வேலே செய்யும்போது, கண்கள் இஷ்டம்போல் மேயும்போது, மனசும் தன் தோழிலே ஒழுங்காகச் செய்து கொண்டிருந்தது.

பழைய காலண்டர்கள் சில உருட்டிச் சுருட்டி பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன. வினேலியா ஒயிட்ரோஸ் சோப், எலன்லேட் சோப் போன்ற கம்பெனிகள் பெரிது பெரிதாக, அழகு அழகாக அச்சிட்டு விநியோகித்திருந்தவை. பெரிது பெரிதாக, வருஷந்தோறும் ஒவ்வொரு வசீகர ஒவியத்தை, குளுமையான நிறங்களில் மினுமினுவென்று அச்சிட்டுக் கொடுத் திருந்தார்கள். ரவிவர்மா ஒவியங்கள்-லகஷ்மி, சரஸ்வதி, கருடன் மீது உட்கார்ந்திருக்கும் திருமால், சீதேவி பூதேவியோடு ; ஊஞ்சல் மோகினி, புல் தரைமீது ஒயிலாகச் சாய்ந்து தாமரை இலைமேல் ஆசையோடு அன்புக்கடிதம் எழுதும் சகுந்தலே, நீ கிருஷ்ணன்-இப்படி விதம் விதமான படங்கள். ஜெர்மனியில் அச்சாகி வந்தவை.

-இப்ப பார்க்கையிலேகூட அழகாக, அருமையா இருக்கு. மினுமினுன்னு. இதுக்கெல்லாம் கண்ணுடியும் சட்டமும் போட்டு சுவரில் மாட்டி வைக்கனுமின்னு ஆசைப்பட்டேன். போட முடியாமலே போயிட்டுது. இந்த ஊரிலேயே இருந் திருந்தால், அது நிறைவேறி யிருந்திருக்கும்...உ.ம். ஒவ் வொரு மனுசனுக்கும் நிறைவேருத ஆசைகள் எத்தனே எத்தனேயோ. -

கனத்த அட்டைகளில் வசீகர வர்ணங்களில் அச்சாகி யிருந்த துருக்கி சுந்தரி, பேபி, சிறு பையனும் பெண்ணும் ஒடை அருகில் உள்ள காற்ருடியால் இயங்கும் மில். இப்படி சில காலண்டர்கள். இவற்றில் சில மேடு பள்ளங்கள் தெரி யும்படி அழுத்தமாக அச்சு பதிக்கப்பட்டிருந்தன. ஒன்றில் "Good Luck’ என்ற எழுத்துக்கள், மின்னும் ஜிகினப்பொடி துரவப்பெற்று, தனிரகமாக இருந்தன.

- கொழும்புக் காலண்டர். இங்கிலாந்திலே பிரின்ட் ஆகிவந்தது. இதுமாதிரிக் காலண்டர் எல்லாம் சமீப காலத் திலே வந்ததே இல்லை. இதெல்லாம் நாற்பது நாற்பத்தைஞ்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/93&oldid=589337" இலிருந்து மீள்விக்கப்பட்டது