பக்கம்:நினைவுச்சரம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 97.

HORSE என்றும், எதிர்மூலையில் குதிரை: என்றும் பின்னி' தனது படிப்பறிவை காட்டியிருந்தாள் நூல்வேலே கற்றவள். அவள் யார் என்று தெரியாமல் போய்விடக்கூடாதே! ஆகவே, அடியில் பிரமாயி அம்மாள் என்று ஆங்கிலத்தில் பொறித்து, பச்ச்ை சிவப்பு ஊதா என்று வர்ண நூல்கள் பொதிந்து பெயருக்கு வானவில் பகட்டு கொடுத் திருந்தாள். -

- பிரமு போட்டதா ! இம்புட்டுப் போலே கிடந்த காலத் திலேயே, அவளுக்கு அப்போ வயசு என்ன பதிமூணு இருந்: திருக்கும், பிரமாயி அம்மாள் ஆகிவிட்ளா அவ ! ஹஹஹ... இப்போன்னு தன் பெயரை பிரேமா?ன்னு ஆக்கியிருப்பா. அவளே ஆரும் கிளாசிலே சேர்க்கப் போனபோது, பேரு என்னமோ மாதிரி இருக்குதே, பிரமாயி இன்னு வேறு நல்ல பேரா வேணும்னு மாத்திக்கிடுவோம். ரிஜிஸ்டர்லே பதிஞ் சாச்சன்னு சொன்னு அப்புறம் மாத்த முடியாதுன்னு ஹெட் மாஸ்டர் சொன்னுரு. இந்தப் புள்ளெ என்ன சொல்லிச்சு தெரியுமா ? இந்தப் பேருக்கு என்ன? பிரமாயி-பி-ர-மா-யி ! இதே நல்லாத்தானிருக்கு. எங்க ஆச்சி பேரு. இதை ஒண்னும் மாத்தவேண்டாம்னுட்டுது. பெரிய வாயாடியா இருந்துது. பாவம் கல்யாணம் முன்குடியே, பதினெட்டாவது வயசிலே செத்துப்ப்ோச்சு. ஊம். மனுசங்க வாழ்வு எப்படி எப்படியோ அமையுது ஏன் இப்படி இருக்கு ? ஏன் இது மாதிரி இருக்கக் கூடாதுன்னு யாரைப்போயி கண்டிச்சுக் கேட்க. -

- அம்மை வழியிலே எப்படியோ ஒரு உறவில் அக்காள் ஆன சங்கம்மாளின், அவள் முழுப் பேரு என்ன ? வந்து... ஊம்... ஆமா. சங்கரவடிவு அம்மாள், மகள்தான் பிரமு. படு சுட்டி. அது சின்ன வசாயிருந்தபோது அதை எனக்குக் கட்டிவச்சிரலாம்னு ஏகமனசாத் தீர்மானம் பண்ணியிருந் தாங்க. பிரமுவின் பன்னிரண்டு பதிமூணுவது வயசுவரை கூட அந்தத் தீர்மானம் அப்படியேதான் இருந்தது. அப்தச் சமயத்திலே அந்தப் புள்ளெ பின்னிய அட்டைப்படத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/97&oldid=589341" இலிருந்து மீள்விக்கப்பட்டது