பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 59 உயர்நிலைப் பள்ளியில் இவற்றிற்கு வாய்ப்புகளை இழந்ததால் கல்லூரியிலும் நான் வாய்ப்பின்றி வாடநேர்ந்தது. கல்விக்கூடங்கள், அமைப்பு முறைக்காக மட்டுமல்லாது மெய்யாகவே, விளையாட்டு வாய்ப்புகளைத் தாராளமாக வழங்க வேண்டும். அவ்வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும்படி, படிப்பாரை ஊக்குவிக்க வேண்டும். 'விளையாட்டுத்தானே என்று அலட்சியப்படுத்தாமல் மாணவர் களும் மாணவியரும் படிக்கும் பருவத்தே விளையாட்டுகளில் பங்குகொள்ள வேண்டும். எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னால், உலகப் போட்டிகளில் ஈடுபடுவதற்காக இப்போதிருந்தே கடும் பயிற்சி பெறும் சோவியத் நாட்டின் காளையரையும் கன்னியரையும் பற்றி நிறையப் படிக்கிறோம். உலகப் போட்டிகளில் அதிகப்படியான பரிசுகளைப் பெற்று, முதல் இடத்தில் சோவியத் நாடு நிற்பதைக் கண்டு வியக்கிறோம். அந்த வெற்றி வீரர்கள் வெறும் கோயில் காளைகள் அல்லர். கடுமையான விளையாட்டுப் பயிற்சிகளுக்கு ஆட்படும் அவர்கள் கடுமையான உழைப்பிலும் உவந்து ஈடுபடுவதை உலகறியும். உலகப் போட்டிகளில் அநேகப் பரிசுகளைத் தட்டிக்கொண்டு வரப் பயன்பட்ட அதே மனப்போக்கும் பழக்கமுமே புதியதோர் உலகைச் செய்யவும் அவர்களுக்கு உதவிற்று; உதவுகிறது. எனவே இளைஞர்கள் மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. 5. நெஞ்சில் பதிந்த நினைவுகள்

  • -டலை வளர்த்தேன்

இன் உயர்நிலைப் பள்ளியில் விளையாடும் வசதி குறைவு. அதனால் 'ாதிக்கப்பட்டவன் நான். ஆயினும் நான் உடலோம்பலைப் புறக்கணிக்கவில்லை. உடற்பயிற்சி வகுப்புகளுக்கு மட்டம் போட்டதில்லை. ର இயற்கையில், உயரம் குறைந்தவன் நான்; அதைப் போக்கிக் "ள்ள முயன்றதில்லை. என் குட்டையான உடம்பு மெலிந்த ஒன்றாகவும் இருந்தது. அதில் வலிமை சேர்க்க முயன்றேன். ஒரளவு வெற்றியும் பெற்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/101&oldid=786841" இலிருந்து மீள்விக்கப்பட்டது