பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ2 நினைவு அலைகள் 'மணவூர் அம்மா என்னும் வயது முதிர்ந்த விதவை சாப்பாட்டுக் கடை வைத்து நடத்தி வந்தார். அவர் சைவர் என்று கேள்விப்பட்டோம். அவரிடம் இருவேளைச் சாப்பாட்டிற்கும் காலைப் பலகாரத்திற்கும் பணங்கொடுத்துவிட்டு, ஐந்தாறு பேர்கள் சாப்பிட்டு வந்தோம். எளிய சாப்பாடானாலும் வீட்டுச் சாப்பாடு; உபசாரச் சாப்பாடு. ஒரு ஞாயிற்றுக் கிழமை, காலைச் சிற்றுண்டிக்கு, தோசையும் மோர்க் குழம்பு வடையும் கொடுத்தார். வழக்கம்போல், தோசை மெதுவாகவும் சுவையாகவும் இருந்தது. வடையோ வாயிற் போட்டதும் கரைந்துவிடும் அளவு மிக மெதுவாக இருந்தது. ஆயினும் அதில் என்னவோ சற்றுக் கசப்பு இருந்தது. அதைச் சொன்னபோது எப்படிக் கசக்கும்? நாக்கில் கோளாறு என்று அடித்துச் சொல்லிவிட்டார். எப்படியோ இரண்டு வடைகளை விழுங்கிவிட்டேன். வீடு சென்றேன். ஒரு மணியில் வயிற்றுப் போக்கு கண்டது. பலமுறை போயிற்று. மறுநாள் வடை சாப்பிட்ட அத்தனை பேரும் அதே புகார் கூறினார்கள். அம்மையார் விளக்கங் கூறினார்; விளக்கம் என்ன? சமையலுக்கு நல்லெண்ணெய் வைத்திருந்த அலமாரியில், ஒரு புட்டியில் நல்ல விளக்கெண்ணெயும் வைத்து இருந்தார். நல்லெண்ணெயை ஊற்றி வடை சுடத் தொடங்கியபோது வாணலியில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றினால் நல்லது என்று தோன்றியதாம். அலமாரியிலுள்ள நல்லெண்ணெய் கொஞ்சம் ஊற்றும்படி சிற்றாளிடம் கூறிவிட்டு ஒருவருக்குத் தோசை பரிமாறுவதற்குப் போய்விட்டார். சிற்றாள் தெரியாமல் விளக்கெண்ணெய் கொஞ்சம் ஊற்றி விட்டார். இதை அறியாத அம்மையார் எங்களுக்கு விளக்கெண்ணெய் வடை சுட்டுத் தந்தார்கள். அந்த ஒரு முறை மட்டுமே விளக்கெண்ணெய் சாப்பிட்டேன்; அப்புறம் சாப்பிட்டதில்லை. தோசைகளும் மோர்க் குழம்பு வடைகளும் இந்த நூற்றாண்டின் இருபதின் தொடக்கத்தில் காஞ்சியில் ஒட்டல்கள் பல இல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக முளைத்த காப்பி ஓட்டல்கள் மிகச் சிலவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/104&oldid=786844" இலிருந்து மீள்விக்கப்பட்டது