பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 65 மற்றப் பார்ப்பனரல்லாதார் தனியாக இருந்து உண்போம். அநேகப் பலகாரக் கடைகளில், நீரோ, தனியாத் தண்ணிரோ குடிக்கும் போது குவளை, உதட்டில் தவறியும் படக்கூடாது. அவ்வளவு உயர்த்திக் கவனமாகக் குடிக்கவேண்டும். 6. கழுத்துக்கு மேலே கத்தியா? ஆமணக்கு இலை மருத்துவம் மாணவப் பருவத்தில் நான் நோய் நொடிக்கு ஆளானதில்லை என்று சொல்லலாம். துப்புரவான வீடு, துப்புரவான உணவு, ஒழுங்கான வாழ்க்கை, உடற்பயிற்சி ஆகியவை அதற்கு உதவின. ஆயினும் சிறுவனாக ஆறாம் வகுப்பில் படிக்கும்போது எனது வலப்பக்கத்துக் கீழ்த்தாடையில் கட்டி ஒன்று வந்தது. ஆமணக்கு இலையை வாட்டி விளக்கெண்ணெய் தடவி, கட்டியின் மேல் போட்டு வந்தார், என் பாட்டி. சில நாள்களில் கட்டி உடைந்தது; சீழ் வந்தது; ஆமணக்கு இலை மருத்துவம் தொடர்ந்தது. கட்டி பாதியளவு குறைந்த பின் இரண்டாவது துவாரம் ஒன்று புதிதாகத் தோன்றியது. அதன் வழியாகச் சீழ் வடியத்தொடங்கியது. அந்த நிலையில், கிறித்துவ மருத்துவ மனைக்கு அழைத்துப் போனார்கள். அங்குள்ள மருத்துவர் கட்டியைச் சோதித்தார். அறுவை மருத்துவம் செய்து கொள்ள வேண்டுமென்றார். திகில் அடைந்தேன்; 'என் தந்தைக்கும் அதே நிலை. நண்பர் ஒருவரின் யோசனைப்படி, என்னுடைய தந்தை, என்னைச் சென்னைக்கு அழைத்துச் சென்றார். சென்னையில் தொண்டைமண்டல துளுவ் வேளாளர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணிபுரிந்த திரு. எஸ்.எஸ். அருணகிரி உதவிய்ை நாடினோம். 'கழுத்துக்கு மேற்பட்ட நோய்களில் வல்லுநர் டாக்டர் சங்கரநாராயணப் பிள்ளை. அவரிடம் போவோம்' என்று சொல்லி, என்னை அவரிடம் அழைத்துக் கொண்டு போனார். பிராட்வேயில் இருந்த அவர் மருத்துவ மனைக்குப் போனேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/107&oldid=786847" இலிருந்து மீள்விக்கப்பட்டது