பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ெ 圖鬥 ந. து. சுந்தரவடிவேலு 73 உண்ணும் உணவு மட்டுமல்ல குழந்தையை உருவாக்குவது! எண்ணும் எண்ணமும் குழந்தையின் இயல்பிற்கும் பண்பிற்கும் போக்கிற்கும் காரணமாகும். சூலுற்றிருக்கும்போது, போராட வேண்டிய நிலைக்கு, அலற வேண்டிய நிலைக்கு, கதறவேண்டிய நிலைக்கு, ஏங்கி ஏங்கித்தவிக்கும் நிலைக்குத் தாயைத் தள்ளக்கூடாது. கருவில் உள்ள குழந்தையுள் அவ்வுணர்வுகள் பதியும். மாறாக கருவுற்றிருக்கும்போது நிறைவோடு, மகிழ்ச்சியோடு, நம்பிக்கையோடு இருக்கும் தாய், பெற்றெடுக்கும் குழந்தை நிறைவோடு வாழ்க்கையைத் தொடங்கும். கருவுற்ற காலத்தில் எண்ணுவதெல்லாம் உயர்ந்த எண்ணங்களாக, மிகத் தூய்மையான எண்ணங்களாக, நன்மையான எண்ணங்களாக இருப்பின், குழந்தைக்குள் இவை விதை கொள்ளும். இதைச் சொல்லவே, நம் முன்னோர் கருவிலே திருவை நாடினார்கள். இதை மக்கள் முயற்சியால் பெறவேண்டும். சமுதாயம் இதற்குத் துணைநிற்க வேண்டும். கருவுற்ற பெண்ணின் குடும்பத்தார், அவளை மகிழ்ச்சியோடும், நற்சிந்தனையோடும் வைத்திருக்க வேண்டும். அதற்கு உதவும் பொருட்டே, சில சடங்குகளை நுழைத்தார்கள். காலப் போக்கில் இவை பயனற்ற மூடப் பழக்கங்களாக மாறிவிட்டன. முன்னர் எத்தனை நியாயமாகக் குற்றங் கண்டிருந்தாலும், கருவுற்ற காலத்திலாகிலும் மாமிகள், மருமகளைக் குறை காண்பதையும் இடித்துரைப்பதையும் புண்படுத்துவதையும் விட்டுவிடுதல் சிறந்தது. தாயாகப் போகிறவள், மனம் புண்பட்டால் குழந்தையும் புண்பட்ட உள்ளத்தோடு பிறக்கும். காலத்தின் முதிர்ச்சியில் புண்னெல்லாம் கக்கும். உற்றார் உறவினர்களும், சூலுற்றவர் மனம் நோகாதபடியும், பெரியதை, நல்லதை, சிறந்ததையே எந்நேரமும் நினைக்கும்படியுமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இழந்தையின் பால பருவம் குழந்தையின் பால பருவம் மிக முக்கியமானது. அப்பருவத்தில் அச்சமூட்டுதல் கோழையாக்கும். மிரட்டுதல், முரடனை வளர்ப்பதாக (ԿԲւգ Ավւb. உரிமைக் காற்றில், ஆதரவு வெயிலில் குழந்தைகளை வளர '-வேண்டும். கூடி விளையாட தோழமையோடு வாழ, குழந்தை *இக்கு வாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/115&oldid=786856" இலிருந்து மீள்விக்கப்பட்டது