பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 75 கைப்பெட்டியில் இருந்த தீட்டுப் படாத உடையை எடுத்து என்னை அணிந்து கொள்ளச் செய்வார். அதிலும் ஏதும் தவறு இருப்பதாக அவ்வயதில் தோன்றவில்லை. ஆகவே, அதைப் பற்றி முணுமுணுக்கவும் இல்லை. உயர்நிலைப் பள்ளியில் எங்களுக்குத் தண்ணிர் கொடுக்க ஒர் அய்யங்காரை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர், வெளியே உள்ள தெருக் குழாயில் இருந்து, பானைகளில் தண்ணிர் பிடித்துக் கொண்டு வருவாா. பார்ப்பனப் பிள்ளைகளுக்குத் தனிக் குவளைகளிலும் மற்றவர்களுக்கு வேறு குவளைகளிலும் ஊற்றுவார். இரு பிரிவினருமே எச்சில்படாமல் குடிப்போம். அப்படியிருக்க இரு பிரிவு ஏன்? தனித்தனி குவளைகள் ஏன்? இக்கேள்விகள் என்னில் எழவில்லை. எங்களுர்த் திருவிழா பதினோராம் வயதுவரை உள்ளது உள்ளபடியே ஏற்றுக் கொண்டேன். அவ்வயதில் ஏற்பட்ட ஒர் அதிர்ச்சி, என்னிடம் சாதி பற்றிய சிந்தனையைத் துண்டிவிட்டது. எங்கள் ஊர்க் கோயில்களில் உற்சவ மூர்த்திகள் இல்லை. அடுத்துள்ள இளையனார் வேலூரில் பாலசுப்ரமணியர் கோயில் உள்ளது. அதில் உற்சவமூர்த்தி உண்டு. அக்கோயிலில் கோடை காலத்தில் பிரம்மோற்சவம் நடக்கும். எட்டாம் நாள் சூரசம்ஹாரம்: சுப்ரமணியர் குதிரை வாகனத்தில் ஏறி உலா வருவார். | காலையில் பல்லக்கில் வந்து, எங்கள் ஊர் மேற்குக் கோடியில் உள்ள சிவன் கோவிலில் இறங்குவார். இரவு, அங்கிருந்து அலங்காரத்தோடு, குதிரை வாகனத்தில் உலா வருவார். இரு தெருக்களைக் கடந்து ஆற்றில் இறங்குவார். இங்கு குரனை வெல்வார். அக்காட்சியைக் காண அக்கம் பக்கத்திலிருந்து பெருங்கூட்டம் கூடும். வாலாஜாபாத்திலிருந்து வளையல் கடைகள், புத்தகக் கடைகள், சோப்பு சீப்புக் கடைகள் ஆகியவை வந்து, ஆற்றில் கூடாரம் அடிப்பது உண்டு. -- வாலாஜாபாத்திலிருந்து, சத்திரத்து அய்யர் மிட்டாய் வரும். இருவகை இனிப்பு, மூன்று வகைக் கார வகைகளைக் கொண்டு வருவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/117&oldid=786858" இலிருந்து மீள்விக்கப்பட்டது