பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 77 'அந்தப் புள்ளையப் பாரு! அவர் வேட்டியை விடவா உன் வேட்டி வெளுத்திருக்குது? அவர் சொக்காய்க்கு என்ன? தும்ப மலராட்டம் இருக்கு. உன் துண்டு, வேர்வை நாற்றம் அடிக்குது - அப்படியிருந்தும் நீ ஒஸ்தி இல்லே....? ■ 'அவர் தொட்டுட்டதாலே, என்ன ஆயிட்டுது? இப்படி குதியாய்க் குதிக்கிறே கொதிக்கிற எண்ணெயிலே விழுந்த பணியாரமா நீ, 'ஏதோ வானமே இடிந்து விழுந்த மாதிரி பதற்றியே! 'எல்லாத்தையும் வாங்கிக்கிறேன்னா, மடி நெறய பணம் வெச்சிருக்கியா ன்னு யாரைப் பாத்துக் கேட்கிறே? l --- 'பதினைந்து ரூபாய்க்கு மேலேயா உன் பலகாரம் போகும். இவங்களுக்கு இது என்ன பெரிய பணம்? 'மாதம் பதினைந்து ரூபாய் கொடுத்து உன்னையே சமையல்காரராக, வைத்துக்கொள்ள அவங்களுக்குச் சொத்து இருக்கு, தெரியுமா? "எங்க பெரிய முதலியார் நினைச்சா, அப்புறம் நீ, சீவரம் போய்ச்சேர மாட்டே பத்திரம் அடங்கிப் பேசு: பிழைச்சிப் போகலாம்,' இப்படி, மடமடவென்று, பனிக்கட்டி மழையாகப் பெய்தார், அக்குடியானவர். குரலோ, சிங்க முழக்கம். நல்ல வேளை, கொலை செய்யச்சதி செய்ததாக அந்தக் குடியனாவர் மீது அய்யர் வழக்குப் போடவில்லை. எதிரிலிருப்பவரை ஏக வசனத்தில் அழைப்பது, பண்பாட்டுக் குறைவு. என் அம்மா, சிறுவர் சிறுமியரைத் தவிர யாரையும் 'நீ என்று ஒருமையில் தாழ்த்திப் பேசமாட்டார். எனவே, குடியனாவர் சத்திரத்து அய்யரைப் பலமுறை நீ" என்றழைத்ததைக் கேட்டு என் தாயின் முகம் வாடிற்று. ஆனால், ஏகவசனமும் சிங்க முழக்கமும் அய்யரை நிதானப்படுத்திற்று. கடைசி மிரட்டல் நொடியில் வேலை செய்தது. அம்மிரட்டலைக் கேட்டதும் அய்யரின் முகம் வெளுத்தது. இமைப்பொழுதில், சமாளித்துக் கொண்டு, 'ஐயா! எந்தப் பெரிய முதலியார் வீடு இவங்க அதைச் சொல்லைய்யா. உனக்குப் புண்ணியமாக இருக்கும் என்று கெஞ்சினார். 'ஊரிலே, அவர் பேர் சொல்லமாட்டோம். இருந்தாலும், இந்த வேளை சொல்லாமே முடியாது. கோபப்படாதீங்க அம்மா.துரைசாமி முதலியார்'ன்னு பெயர் உடையவர், ஒருத்தர்தான் இந்த ஊரிலே இருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/119&oldid=786860" இலிருந்து மீள்விக்கப்பட்டது